ஹோம் /நியூஸ் /இந்தியா /

சாலை பள்ளத்தால் பறிபோன 22 வயது இளைஞரின் உயிர்: தொடரும் சோகம்

சாலை பள்ளத்தால் பறிபோன 22 வயது இளைஞரின் உயிர்: தொடரும் சோகம்

சாலை குழி விபத்து

சாலை குழி விபத்து

முதல்வரின் அக்கறையின்மையும், குற்றவியல் அலட்சியமும், பெங்களூர் மாநகராட்சியின் நிர்வாக முறைகேடும் பெங்களூர் வாசியின் உயிரைப் பறித்து விட்டது- காங்கிரஸ் குற்றச்சாட்டு

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Bangalore [Bangalore], India

கார்நாடக மாநிலம் பெங்களூருவில் சாலை குழிகள்  ஏற்படுத்திய விபத்து காரணமாக 22 வயது நிரம்பிய இளைஞர்பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ச்சியான சாலை குழி விபத்துகளால் அப்பகுதி மக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர்.

உயிரிழந்த ஹர்ஷா கேரள மாநிலத்திச் சேர்ந்தவர் என்றும், பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில்  படித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று இரவு, பெங்களூருவில் எலகங்கா பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக சாலையில் ஆங்காங்கே குழிகள் உருவாகியுள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த பள்ளத்தால் தவிர்க்க கார் ஓட்டுநர் முயற்சி மேற்கொண்டதாகவும், அதில் கட்டுப்பாட்டை இழந்து கேரள வாலிபர் வந்த இருசக்கர வாகனத்தில் அந்த கார் மோதியதாகவும் கூறப்படுகிறது.

இந்த, துயர சம்பவத்தில் வெறும் 22 வயது நிரம்பிய ஹர்ஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் பின் சீட்டில் வந்த இளைஞரும் , கார் ஓட்டுநரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த ஓராண்டில் பெங்களூருவில் மட்டும் சாலை குழிகள் காரணமாக ஆறுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தேசிய அளவில், சாலை குழிகள் விபத்துகளால் ஏற்படும் மரணங்களில் கர்நாடகா மாநிலம் அதிகம் பாதிக்கப்படுவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது. 

சாலைகளில் உள்ள குழிகளை செப்பனிடாத மாநில அரசை எதிர்கட்சியான காங்கிரஸ் வன்மையாகக் கண்டித்துள்ளது.

      

கர்நாடக காங்கிரஸ் மேற்பனையாளர் ரந்தீப் சிங் சுர்ஜீவலா தனது ட்விட்டர் குறிப்பில், " முதல்வரின் அக்கறையின்மையும், குற்றவியல் அலட்சியமும், பெங்களூர் மாநகராட்சியின் நிர்வாக முறைகேடும் பெங்களூர் வாசியின் உயிரைப் பறித்து விட்டது" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்க:   தேர்தல் வெற்றிக்காகதான் பொது சிவில் சட்டம் வாக்குறுதி : பாஜகவை சாடிய அரவிந்த் கெஜ்ரிவால்!

First published:

Tags: Road accident