உள்ளே விட மறுத்த துணிச்சல் காவலர் - வந்த வழியே திரும்பிச் சென்ற அமைச்சர்

பணியில் துணிச்சலாக பதிலளித்த காவலரை கண்டு வியந்த அமைச்சர் வந்த வழியே திரும்பிச்சென்றார்.

உள்ளே விட மறுத்த துணிச்சல் காவலர் - வந்த வழியே திரும்பிச் சென்ற அமைச்சர்
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: July 13, 2020, 9:28 PM IST
  • Share this:
கர்நாடகத்தில் மூடப்பட்ட சாலையில் செல்ல முயன்ற ஆளுங்கட்சி அமைச்சரையே போக்குவரத்து காவலர் ஒருவர் கண்டிப்பாக அனுமதிக்க மறுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

கர்நாடகத்தில் வருவாய்த்துறை அமைச்சராகவும், பெங்களூரு நகர கொரோனா தடுப்பு அதிகாரியுமாக அசோக் உள்ளார். பெங்களூருவில் ஞாயிற்றுகிழமைகளில், கொரோனாவை கட்டுப்படுத்த சாலை போக்குவரத்து கட்டுப்பாடுகள் உள்ளன. இந்நிலையில் கடந்த ஞாயிறன்று டவுன் ஹால் சர்கிள் பகுதியில் மைசூரு செல்லும் முக்கிய சாலை மூடப்பட்டது.

அந்த சாலையை ஆம்புலன்ஸ் மட்டுமே கடக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமைச்சர் அசோக் அந்த வழியாக செல்ல காரில் வந்தபோது, பணியில் இருந்த காவலர் ஒருவர் அமைச்சராக இருந்தாலும் பரவாயில்லை என்று சாலையை திறந்து விட மறுத்தார்.





படிக்க: இன்று அறிமுகமாக இருக்கும் Google-இன் ”சம்திங் ஸ்பெஷல்” என்ன?
படிக்க: ஆறு ஒன்றில் இரு வண்ணங்களில் நீர் ஓடும் ஆச்சர்யம் - வீடியோ








பணியில் துணிச்சலாக பதிலளித்த காவலரை கண்டு வியந்த அமைச்சர் வந்த வழியே திரும்பிச்சென்றார்.
First published: July 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading