Home /News /national /

கோவில்களுக்கும் ஒலிபெருக்கி சத்தத்தை கட்டுப்படுத்த நோட்டீஸ்.. கர்நாடகா இமாம் மவுலானா மக்சூத் விளக்கம் 

கோவில்களுக்கும் ஒலிபெருக்கி சத்தத்தை கட்டுப்படுத்த நோட்டீஸ்.. கர்நாடகா இமாம் மவுலானா மக்சூத் விளக்கம் 

கோவில்களுக்கும் ஒலிபெருக்கி தொடர்பான நோட்டீஸ்.. கர்நாடகா இமாம் மவுலானா மக்சூத் விளக்கம் 

கோவில்களுக்கும் ஒலிபெருக்கி தொடர்பான நோட்டீஸ்.. கர்நாடகா இமாம் மவுலானா மக்சூத் விளக்கம் 

நாம் அனைவரும் இந்த விதிகளை பின்பற்றினால் எந்த பிரச்சனையும் ஏற்படாது. நம்மிடம் உள்ள வேற்றுமையை களைந்து ஒற்றுமையுடன் நாட்டின் வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

    மசூதிகள் மட்டுமல்லாது கோவில்கள், சர்ச்சுகளுக்கும் ஒலிபெருக்கி தொடர்பான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக பெங்களூரு ஜம்மா மசூதியின் தலைமை இமாம் மவுலானா மக்சூத் இம்ரான் தெரிவித்துள்ளார்.

    கர்நாடகா மாநிலத்தில் ஒலிபெருக்கிகள் பயன்பாடு தொடர்பாக கட்டுப்பாடுகள் விதித்து அம்மாநில காவல்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி, பெங்களூருவில் மட்டும் 301 நிறுவனங்களுக்கு உரிய முறையில் ஒலி பெருக்கிகளை பயன்படுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இதில் 125 மசூதிகள், 83 கோவில்கள், 22 சர்ச்சுகள், 12 தொழிற்சாலைகள், 59 பார், பப், உணவகங்கள் அடக்கம். அண்மைக்காலமாக வலதுசாரி அமைப்புகள் மசூதிகளில் ஒலி பெருக்கிகள் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என கர்நாடகாவில் வலியுறுத்திவந்த நிலையில் இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டது.

    மக்களுக்கு மலிவு விலையில் சிறந்த சுகாதாரம் வழங்குவதில் அரசு முழு கவனம் செலுத்துகிறது: பிரதமர் மோடி

    காவல்துறையின் இந்த நோட்டீஸ் குறித்து பெங்களூரு ஜம்மா மசூதியின் தலைமை இமாம் மவுலானா மக்சூத் இம்ரான் ரஷ்தி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "காவல்துறையின் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். பல மசூதிகளுக்கு இதுபோன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உத்தரவை பின்பற்றவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    காவல்துறை உத்தரவை நாங்கள் பின்பற்றுவோம். அதற்கான கருவிகளை நாங்கள் பொருத்த ஆரம்பித்துள்ளோம். இதுபோன்ற நோட்டீஸ் கோவில்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. நாம் அனைவரும் இந்த விதிகளை பின்பற்றினால் எந்த பிரச்சனையும் ஏற்படாது. நம்மிடம் உள்ள வேற்றுமையை களைந்து ஒற்றுமையுடன் நாட்டின் வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும்" என்றார்.

    இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, "இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் வாக்குவங்கி அரசியல் செய்கின்றன. இவர்கள் அனைவரும் சந்தர்ப்பவாதிகள். ஹிஜாப் விவகாரத்தை ஆரம்பித்தது யார். தற்போது நீதிமன்ற உத்தரவு வந்தது அவர்கள் அமைதி காக்கிறார்கள். வாக்குவங்கிக்காக காங்கிரஸ் புதிய புதிய பிரச்சனைகளை உருவாக்கி வருகிறது. அதை நாங்கள் சரி செய்துவருகிறோம். மசூதிகளுக்கு மட்டுமல்ல அனைத்து ஒலிபெருக்கிகளுக்கும்தான் இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்றார்.

    அதேவேளை காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சித்தராமய்யா இந்த சர்ச்சைக்கு மாநில அரசே காரணம் என குற்றம்சாட்டியுள்ளார். அடுத்தாண்டு வரப்போகும் தேர்தலில் மத ரீதியான விஷயங்களை கிளப்பி ஆட்சியை மீண்டும் கைப்பற்ற பாஜக நினைக்கிறது. ஆனால் பாஜகவின் இந்த செயல் அந்த கட்சிக்கே நஷ்டத்தை ஏற்படுத்தும் என சித்தராமய்யா தெரிவித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Karnataka

    அடுத்த செய்தி