Home /News /national /

பெங்களூரு மழை வெள்ளத்தால் 5 மணி நேரம் நெரிசலில் சிக்கித் தவித்த ஊழியர்கள்.. ரூ.225 கோடி இழப்பு என நிறுவனங்கள் தகவல்

பெங்களூரு மழை வெள்ளத்தால் 5 மணி நேரம் நெரிசலில் சிக்கித் தவித்த ஊழியர்கள்.. ரூ.225 கோடி இழப்பு என நிறுவனங்கள் தகவல்

பெங்களூரு வெள்ளம்

பெங்களூரு வெள்ளம்

ஆகஸ்ட் 30 ஆம் தேதி ORR இல் ஏற்பட்ட வெள்ளத்தால் ஊழியர்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக சாலையில் சிக்கித் தவித்ததால் 225 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Bangalore [Bangalore] |
இந்தியாவின் சிலிக்கான் வேலி என அழைக்கப்படும் பெங்களூருவில் பெய்த கனமழை மற்றும் சரியான உட்கட்டமைப்பு இல்லாததால் சுமார் 225 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக நிறுவனங்கள் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளன.

பெங்களூருவில் உள்ள மத்திய பட்டு வாரியம் மற்றும் கே.ஆர்.புரம் வழித்தடத்திற்கு இடையே உள்ள வெளிவட்டச் சாலையில் (ORR) அரை மில்லியனுக்கும் அதிகமான தொழில் வல்லுநர்கள் பணிபுரிவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 17 கிமீ நீளமுள்ள இந்த சாலையில் பல்வேறு சேவைகள் மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளுடன், ஒரு மில்லியன் மக்கள் வேலை செய்கின்றனர்.

இந்தியா மட்டுமின்றி உலக அரங்கில் இந்த பகுதி பெரிதும் முக்கியத்துவம் பெற்றது. இந்த பகுதியில் ஏற்படும் சிறு மாறுதல் பெரிய லாபத்தையும் கொடுக்கலாம். நஷ்டத்தையும் கொடுக்கலாம். அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இடம், ஆகஸ்ட் 29 மற்றும் 30 தேதி இரவுகளில் பெய்த கன மழை, நீர் சரியான வடிகால் இல்லாததால் நீரில் மூழ்கி உள்ளது. இதனால் சாலைகள் மட்டுமன்றி பல சேவை மற்றும் வங்கிசார் நிறுவனங்களும் நீரில் மூழ்கி உள்ளது.

இந்தியாவின் கன்டென்ட் தலைநகரம் எது தெரியுமா? சத்தீஸ்கரின் கிராமத்தில் மூன்றில் ஒருவர் யூடியூபராம் !

இந்நிலையில், பெங்களூருவில் உள்ள வெளிவட்டச் சாலையில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அதன் பிரதிநிதித்துவ நிறுவனங்களுக்கு 225 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மாயிடம், வெளிவட்ட சாலை நிறுவனங்களின் சங்கங்கள் (ORRCA) கடிதம் சமர்ப்பித்துள்ளன. ORRCA ஆனது வெளிவட்டச் சாலையில் (ORR) உள்ள அனைத்து முக்கிய தகவல் தொழில்நுட்ப மற்றும் வங்கி சார் நிறுவனங்களின் கூட்டமைப்பாகும்.

ஆகஸ்ட் 30 ஆம் தேதி ORR இல் ஏற்பட்ட வெள்ளத்தால் ஊழியர்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக சாலையில் சிக்கித் தவித்ததால் 225 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ORR இல் போதிய உள்கட்டமைப்பு இல்லாதது தற்போது நெருக்கடி நிலையை எட்டியுள்ளது.

ORR நிறுவன பணியாட்கள் மக்கள்தொகையில் 30% பேர் மட்டுமே அலுவலகத்திலிருந்து பணி செய்வதற்குத் திரும்பியிருந்தாலும், உள்கட்டமைப்புச் சரிவு பெங்களூரு நகரின் வளர்ச்சியைக் கையாளும் திறன் குறித்து உலகளாவிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பசிபிக் கடலில் மிதக்கும் 90% குப்பைகளுக்கு இந்த 6 நாடுகள்தான் காரணம்..

சாலைகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க சரியான சாக்கடை மற்றும் வடிகால் வசதிகளை விரைந்து செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். சாலைகளில் உள்ள நடைபாதை மற்றும் வடிகால்களில் உள்ள அடைப்புகளை சரி செய்ய வேண்டியுள்ளனர்.

இப்படி உட்கட்டமைப்பு சிக்கல்கள் இருந்தால் இங்குள்ள நிறுவனங்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டி வரும். அது இந்த மாநிலத்தின் நற்பெயர் மற்றும் கௌரவத்தை களங்கப்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர்.2020 க்குள் ஒயிட்ஃபீல்ட் மற்றும் எலக்ட்ரானிக் சிட்டி மெட்ரோ பாதைக்கான பணி பூர்த்தி செய்யப்படாததால், இப்பகுதியில் மெட்ரோ திட்டத்தை விரைவுபடுத்துமாறு ORRCA முதலமைச்சரிடம் வலியுறுத்தியது
Published by:Ilakkiya GP
First published:

Tags: Bengaluru, Flood, Heavy Rains, IT Industry, Loss

அடுத்த செய்தி