ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்தியாவில் கிளை பரப்பும் ஓமைக்ரான் வைரஸ் - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி

இந்தியாவில் கிளை பரப்பும் ஓமைக்ரான் வைரஸ் - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி

கர்நாடகாவைச் சேர்ந்த ஓமைக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 46 வயதான மருத்துவர் எந்த வெளிநாடுகளுக்கும் செல்லாத நிலையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

கர்நாடகாவைச் சேர்ந்த ஓமைக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 46 வயதான மருத்துவர் எந்த வெளிநாடுகளுக்கும் செல்லாத நிலையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

கர்நாடகாவைச் சேர்ந்த ஓமைக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 46 வயதான மருத்துவர் எந்த வெளிநாடுகளுக்கும் செல்லாத நிலையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கொரோனா வைரஸின் உருமாறிய வகையான ஓமைக்ரான் எனும் புதிய வேரியண்ட் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட ஓமைக்ரான் வகை கொரோனா வைரஸ், மிக வேகமாக பரவக்கூடியது என்பதால் ஆபத்தானதாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

உலகை அச்சுறுத்தி வரும் புதிய வகையான ஓமைக்ரான் வைரஸ் இதுவரை 29 நாடுகளைச் சேர்ந்தவர்களை பாதித்திருக்கும் நிலையில் இந்தியாவிலும் இந்த வைரஸ் நுழைந்திருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. கர்நாடகாவில் இருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதியானதாக இன்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்த 46 வயதான மருத்துவர் ஒருவருக்கும் தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த ஒருவருக்கும் தான் ஓமைக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. இதில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த நபர் வரும்போதே கோவிட் நெகட்டிவ் சான்றுடன் தான் வந்திருக்கிறார். இங்கு வந்த பின்னர் அவருக்கு எடுக்கப்பட்ட சோதனையில் கொரோனா இருப்பது தெரிந்து தனிமை சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் கொரொனா நெகட்டிவ் ஆனவுடன் அவர் துபாய்க்கு புறப்பட்டு சென்றுவிட்டார். இங்கிருந்து கிளம்பிய பின்னரே அந்த நபருக்கு ஓமைக்ரான் வகை கொரோனா இருப்பது தெரியவந்திருக்கிறது.

Also read:   ஓமைக்ரான் வைரஸால் எந்தெந்த நாடுகளில் எத்தனை பேருக்கு பாதிப்பு?

இதனிடையே கர்நாடகாவைச் சேர்ந்த ஓமைக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 46 வயதான மருத்துவர் எந்த வெளிநாடுகளுக்கும் செல்லாத நிலையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் எடுத்துக்கொண்ட இவருக்கு கடந்த நவம்பர் 21ம் தேதி அறிகுறிகள் தென்பட்டது. பின்னர் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 3 நாட்கள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியிருக்கிறார்.

Also read:   6 குழந்தைகளின் தாய், 14 வயது சிறுவனுடன் ஓட்டம் - 40 வயதில் மலர்ந்த காதல்

இந்த மருத்துவருக்கு தற்போது ஓமைக்ரான் இருப்பது உறுதியான நிலையில், அவரின் தடம் கண்டறிதலை மாநில சுகாதாரத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இதில் அவரின் நேரடி தொடர்புகள் 13 பேரும், மறைமுக தொடர்புகள் 250 பேரும் இருப்பதாக தெரியவந்திருக்கிறது. இந்த தொடர்புகளில் 5 பேருக்கு தற்போது கொரோனா பாசிட்டிவ் ஆகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஐந்து பேரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்கானிப்பில் இருந்து வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ஐந்து பேரில் மாதிரிகளும் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இவர்களுக்கும் ஓமைக்ரான் வகை கொரோனா இருக்கிறதா என்பது வரும் நாட்களில் தான் தெரியவரும்.

First published:

Tags: CoronaVirus, Covid-19