Home /News /national /

சிக்கன் நல்லா இல்லை என மனைவிக்கு கத்திக்குத்து.. பயத்தில் தற்கொலை செய்துகொண்ட கணவர்

சிக்கன் நல்லா இல்லை என மனைவிக்கு கத்திக்குத்து.. பயத்தில் தற்கொலை செய்துகொண்ட கணவர்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கணவன், மனைவி இருவரும் துணி தயாரிக்கும் தொழில்சாலையில் வேலைபார்த்து வரும் நிலையில், சம்பவ தினத்தன்று கணவர் மனைவியிடம் சிக்கன் கபாப் செய்து தரும்படி கேட்டுள்ளார்.

    மனைவி செய்த சிக்கன் கேபாப் டேஸ்டாக இல்லை என்று சண்டையில், பெண்ணை அவரது கணவன் கத்தியால் குத்திவிட்டு, தானும் தற்கொலை செய்துள்ளார்.

    கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள பன்னேர்கட்டா என்ற பகுதியில் 48 வயதான சுரேஷ் தனது மனைவி ஷாலினி என்பவருடன் வசித்துவந்தார். இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், துணி தயாரிப்பு தொழிற்சாலையில் இருவரும் வேலை பார்த்து வந்துள்ளனர். சம்பவ தினத்தன்று இருவரும் பணியை முடித்து விட்டு மாலை வீடு திரும்பியுள்ளனர். பின்னர் கணவர் சுரேஷ் மனைவியிடம் தான் வீட்டிலேயே மது அருந்த போகிறேன், எனக்கு சிக்கன் கபாப் செய்து தருகிறாயா எனக் கேட்டுள்ளார்.

    மனைவியும் கணவரின் கோரிக்கையை ஏற்று  செய்து கொடுத்துள்ளார். மனைவி செய்து கொடுத்த கபாபை ருசி பார்த்த கணவர், அது ஒழுங்காக வறுபடவில்லை என்றும் டேஸ்டாகவே இல்லை எனவும் திட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியது.

    ஆத்திரமடைந்த கணவர் சுரேஷ்  சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து மனைவியை குத்தி தாக்கியுள்ளார். உடனடியாக மனைவி ஷாலினி கத்தி கூச்சல் போட்ட நிலையில், அருகே வசிப்பவர்கள் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

    தான் செய்த தவறை உணர்ந்த கணவர் பயந்து உடனடியாக அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இது தொடர்பாக பன்னேர்கட்டா காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரிக்க சென்ற நிலையில், வீட்டின் அருகே உள்ள மரத்தில் சுரேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது. நிதானம் தவறி தான் செய்த தவறின் அச்சம் காரணமாக சுரேஷ் இந்த முடிவை எடுத்திருப்பார் என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட நாய்.. இறுதி அஞ்சலி செலுத்தி இந்திய ராணுவம் நெகிழ்ச்சி

    சுரேஷ்ஷின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஷாலினியிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
    Published by:Kannan V
    First published:

    Tags: Bengaluru, Husband Wife, Stabbed, Suicide

    அடுத்த செய்தி