இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு நகரமான பெங்களூருவில் பெண் ஒருவர் ராபிடோ ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட நிகழ்வு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.
பெங்களூருவை தளமாகக் கொண்டு இயங்கி வரும் இந்திய பைக் டாக்ஸி நிறுவனமான ராபிடோவில் இதுபோன்ற வழக்கு நடைபெறுவது இதுவே முதல் முறை ஆகும். ராபிடோ என்பது வாடகை கார் போன்று வாடகை பைக். முன்பதிவு செய்தால் பைக்கில் வந்து ட்ராப் செய்யும் முறையாகும். முக்கிய நகரங்களில் இந்த சர்வீஸ் உள்ளது. இந்நிலையில்தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கார் டாக்சியில் பலாத்காரம், கூட்டு பலாத்காரம் என்ற செய்திகள் வந்த நிலையில் பைக் டாக்ஸி இதுவரை பாதுகாப்பானதாக கருதப்பட்டது. ஆனால் தற்போதைய சம்பவத்திற்கு பிறகு அதுவும் கேள்விக்குறியாகியுள்ளது.
கேரளவைச் சேர்ந்த பெண் ஒருவர் பெங்களூரில் ரேபிடோ சவாரிக்கு முன்பதிவு செய்திருந்தார். ராபிடோவில் பயணிக்கும்போது நடுவில் நீலாத்ரி நகரில் நிறுத்தி ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர் ஒருவரால் அந்த பெண் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க :சிறுபான்மையினரை சிறப்பாக நடத்தும் நாடுகளின் பட்டியல்.. முதலிடத்தில் இந்தியா.. வெளியான அறிக்கை!
இது குறித்து பைக் டாக்ஸி நிறுவனமான ராபிடோ ஒருங்கிணைப்பாளர் மற்றும் தளவாட சேவை வழங்குநர் இந்த சம்பவம் குறித்த தனது கண்டனத்தையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். எங்கள் நிறுவனத்தில் பதிவு செய்து வேலை பார்க்கும் ஒருவர் செய்த இந்த செயலை ரேபிடோ வன்மையாகக் கண்டிக்கிறது.
மேலும் இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு ஆளாக நேரிட்ட பாதிக்கப்பட்டவரிடம் ஆழ்ந்த மன்னிப்பு கேட்கிறோம். காவல்துறைக்கு அனைத்து உதவிகளையும் அளித்து, குற்றம் சாட்டப்பட்டவரை தண்டிக்க எங்கள் தரப்பு உதவிகளை செய்வோம்.. இந்த வழக்கின் விசாரணையில் போலீஸாருக்கு Rapido தனது முழு ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் என்று அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அணைக்காமல் வீசிய சிகரெட்.. அதிகாலையில் தீப்பற்றி எரிந்த திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில்!
Rapido “வாடிக்கையாளர்கள் பாதுகாப்பே முதன்மை” என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. அவர்களின் பாதுகாப்பு பிரதானம் என்ற உண்மைக்கு மிகவும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது." என்று அறிவித்துள்ளது
இதற்கு முன்னதாக நவம்பர் 16 ஆம் தேதி, பெங்களூருவில் ஒரு பெண், சவாரி செய்யும் போது, தன்னிடம் அவராக நடந்து கொண்டதாக ஓட்டுனர் ஒருவருக்கு எதிராக போலீசில் புகார் அளித்தார். அவர் மீது IPC பிரிவு 354A இன் கீழ் பாலியல் துன்புறுத்தல் வழக்கை போலீசார் தொடங்கினர். ஆனால் அது போலி வழக்கு என்று தெரிய வந்து கைவிடப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bengaluru, Rapido App