ஹோம் /நியூஸ் /இந்தியா /

விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை.. தண்ணீரில் தத்தளிக்கும் பெங்களூரு

விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை.. தண்ணீரில் தத்தளிக்கும் பெங்களூரு

பெங்களூருவில் மீண்டும் மழை வெள்ள பெருக்கு

பெங்களூருவில் மீண்டும் மழை வெள்ள பெருக்கு

பெல்லாந்தூர், சிவாஜி நகர், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் குளம்போல் மழைநீர் தேங்கியது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Bangalore [Bangalore], India

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நேற்று முதல் விடிய விடிய பெய்த கனமழை பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி நகரே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சாலைகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன்,பொதுமக்களின் வாகனங்களும் சேதமடைந்துள்ளன. பெல்லாந்தூர், சிவாஜி நகர், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் குளம்போல் மழைநீர் தேங்கியது. இதனால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

அலுவலகம் முடிந்து வீடு திரும்ப முடியாமல் பலர் சிரமம் அடைந்தனர். அதிகபட்சமாக ராஜமஹால் குட்டாஹல்லி பகுதியில் 59 மில்லி மீட்டர் மழை பதிவானது. சிவாஜி நகர் பகுதியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதியடைந்தனர். வீதிகளில் ஆறுபோல் வெள்ளம் பெருக்கெடுத்ததால், இருசக்கர வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.

குறிப்பாக, மெஜஸ்டிக் பகுதியில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல கார்கள் கடும் சேதமடைந்துள்ளன.வெள்ள நிவாரணப் பணிகளில் அரசு தீவிரமாக களமிறங்கி மழை நீரை வெளியேற்றும் வேலையை துரிதமாக செய்துவருகின்றன. அதேவேளை, அந்தமான் நிக்கோபர் தீவுகள், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக பெங்களூருவில் அடுத்த மூன்று நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக அங்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பெங்களூருவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தாண்டு மழை பொழிவு காணப்பட்டது. 2022இல் இதுவரை மட்டும் 170.6 செமீ மழை பெங்களூருவில் பொழிந்துள்ளது.

இதையும் படிங்க: தடையை மீறி தீபாவளி அன்று பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை.. அரசு அதிரடி உத்தரவு

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பெங்களூருவில் ஏற்பட்ட கனமழை வெள்ள பாதிப்பு காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, ஐடி நிறுவனங்கள் ரூ.225 கோடி மதிப்பில் இழப்புகளை சந்தித்தன. மேலும், நகரின் பெங்களூருவில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் விநியோகம் கூட சில நாள்களுக்கு தடைப்பட்டுள்ளது.

First published:

Tags: Bangalore, Flood, Flood alert, Heavy Rainfall, Heavy Rains