பெங்களூரையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு வெறிச்செயல் சம்பவம் நேற்று நடந்துள்ளது. பிரசிடென்சி கல்லூரியில் பி.டெக் படிக்கும் 19 வயது மாணவி ஒருவர் நேற்று வழக்கம் போல கல்லூரி வந்தார். அப்போது, கல்லூரி வளாகத்தில் நுழைந்த இளைஞர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு மாணவியை சரமாரியாக குத்தினார். மாணவியை குத்திய பிறகு அதே கத்தியைக் கொண்டு தன்னைத் தானே குத்திகொண்டுள்ளார்.
இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள், கல்லூரி பாதுகாவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழக்கப்பட்டு இருவரும் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ஆனால், வரும் வழியிலேயே மாணவி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மாணவியை குத்திக்கொன்ற இளைஞர், மார்பில் ஆழமான கத்திக்குத்து காயம் ஏற்பட்டு தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த இளைஞர் பெயர் பவன் கல்யாண் என்றும், அவர் பெங்களூருவிலுள்ள இன்னொரு கல்லூரியில் பிசிஏ படித்து வந்ததும் தெரியவந்தது. இருவரும் கோலார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
மாணவியை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனே அவர் கல்லூரி வந்துள்ளார். தன்னுடைய காதலை நிராகரித்த மாணவி, வேறொருவரை காதலித்த ஆத்திரத்தில் அவரை குத்திக்கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. என்றாலும் கொலைக்கான உண்மையான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bengaluru, Crime News, Girl Murder