சொகுசுக்காரை தறிகெட்டு ஓட்டி போலீஸ் பூத் மீது மோதி புகைப்படம் எடுத்த இளைஞர்...! - வீடியோ

சொகுசுக்காரை தறிகெட்டு ஓட்டி போலீஸ் பூத் மீது மோதி புகைப்படம் எடுத்த இளைஞர்...! - வீடியோ
  • News18
  • Last Updated: February 12, 2020, 6:00 PM IST
  • Share this:
லம்போகினி சொகுசுக் காரை ஓட்டி வந்த தொழிலதிபர் ஒருவரின் மகனான சன்னி சபர்வால் விபத்தை ஏற்படுத்தியதோடு, அதனை புகைப்படம் எடுத்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு சிக்கலில் சிக்கியுள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள சிடிஓ சர்க்கிள் பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் ஒரு விபத்து நடந்துள்ளது. லம்போகினி சொகுசுக் கார் ஒன்று தறிகெட்டு ஓடி சாலையோரம் இருந்த போலீஸ் பூத் மீது மோதியுள்ளது.

காரை ஓட்டியவர் தொழிலதிபர் ஒருவரின் மகன் சன்னி சபர்வால் என்பது பின்னர் தெரியவந்துள்ளது. விபத்து நடைபெற்ற உடனேயே சன்னி சபர்வால் அங்கிருந்து தப்பி விட்டார்.


மேலும் காரை கண்டுபிடிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக, நம்பர் பிளேட்டையும் அவர் அகற்றி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சிறிதி நேரத்திற்கு பிறகு சன்னி சபர்வால் அங்கு மீண்டும் வந்துள்ளார். மேலும் கடுமையாக சேதமடைந்த போலீஸ் பூத் முன்பாக நின்று போட்டோ எடுத்து கொண்டுள்ளார்.மேலும் அந்த புகைப்படங்களை சமூக வலை தளங்களிலும் அவர் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாக பரவ தொடங்கியதால், சன்னி சபர்வால் தற்போது சிக்கலில் சிக்கி கொண்டுள்ளார். போலீஸ் பூத்தின் மீது மோதுவதற்கு முன்னதாக ஒரு ஆட்டோ மற்றும் பைக் ஆகியவற்றின் மீது இந்த கார் மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சன்னி சபர்வால் காரை அப்படியே விட்டு விட்டு அங்கிருந்த தப்பியவுடன் காரை மக்கள் சூழ்ந்து கொண்டுள்ளனர். மேலும் காயமடைந்த ஆட்டோ டிரைவர் மற்றும் பைக் ரைடரை அவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கூட்டி சென்றனர். தற்போது சன்னி சபர்வாலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் அவரது காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

 
First published: February 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading