முகப்பு /செய்தி /இந்தியா / பறக்கும் விமானத்தில் அத்துமீறல்.. கழிவறையில் சிகரெட் பிடித்த இளம்பெண் கைது!

பறக்கும் விமானத்தில் அத்துமீறல்.. கழிவறையில் சிகரெட் பிடித்த இளம்பெண் கைது!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இன்டிகோ விமானத்திற்குள் சிகரெட் பிடித்த இளம்பெண் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Karnataka, India

விமானப் பயணத்தின் போது பயணிகள் சிலர் விதிமீறலில் ஈடுபட்டு அனைவரையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் சம்பங்கள் சமீப காலமாகவே அதிகம் அரங்கேறி வருகிறது. அப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் தான் இன்டிகோ விமானத்தில்  அரங்கேறியுள்ளது.

கடந்த மார்ச் 5ஆம் தேதி அன்று மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு இன்டிகோ விமானம் பயணித்துள்ளது. இதில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது பெண் பிரியங்கா சென்றுள்ளார். கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்டு பெங்களூரு நோக்கி சென்றுள்ளது. விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த நிலையில், பெண் பயணி பிரியங்கா விமானத்தில் இருந்த கழிவறைக்கு சென்றுள்ளார்.

அங்கு தன்னிடம் இருந்து சிகரெட்டை பற்றவைத்து புகைப்பிடித்துள்ளார். தொடர்ந்து, சிகரெட்டை ஒழுங்காக அணைக்காமல் தரையில் போட்டி மீண்டும் தனது இருக்கைக்கு சென்றுள்ளார் பிரியங்கா. சிறிது நேரத்தில் சிகரெட் புகை நெடி வாசம் வந்ததை அடுத்து விமானப் பணிப்பெண் கழிவறைக்குள் சென்று பார்த்துள்ளார்.

அப்போது சிகரெட் துண்டு அணையாமல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பணிப்பெண், துரிதமாக செயல்பட்ட அதை அனைத்தார். பயணி பிரியங்கா விதிகளை மீறி விமானத்திற்குள் புகைப்பிடித்தை கண்டுபிடித்த பணிப்பெண் குழுவுக்கு தகவல்தர பெங்களூரு விமான நிலையத்திற்கு இந்த தகவல் சென்றது.

பெங்களூருவில் விமான தரையிறங்கிய நிலையில், அங்கு தயார் நிலையில் இருந்த விமான நிலைய காவல்துறையினர் இளம்பெண்ணை கைது செய்தனர். சக பயணிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக அவர் நடந்து கொண்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

First published:

Tags: Crime News, Flight, Flight travel, Smoking