ஹோம் /நியூஸ் /இந்தியா /

இன்டிகோ விமான எஞ்சினில் பற்றிக்கொண்ட தீ... பீதியடைந்த பயணிகள்

இன்டிகோ விமான எஞ்சினில் பற்றிக்கொண்ட தீ... பீதியடைந்த பயணிகள்

எஞ்சினில் தீ எரியும் காட்சி

எஞ்சினில் தீ எரியும் காட்சி

இந்த சம்பவம் தொடர்பாக உரிய விளக்க அறிக்கையை விரைவில் அளிக்க வேண்டும் என இன்டிகோ நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  டெல்லியில் இருந்து பெங்களூரு பறக்கவிருந்த இன்டிகோ விமானத்தில் தீப்பொறி பறந்ததால் அதில் இருந்த பயணிகள் பீதிக்கு ஆளானார்கள். டெல்லியில் இருந்து பெங்களூரு செல்லும் 6E-2131 இன்டிகோ விமானம் நேற்று இரவு டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது.

  பறக்க தயாராக இருந்த விமானம் ஓடுபாதைக்கு 9.40 மணி அளவிற்கு வந்துள்ளது. 9.45 மணி அளவில் டேக் ஆப் ஆவதற்கு முழுவேகத்தில் சென்றபோது வலப்பக்க இருக்கைக்கு அருகே எஞ்சினில் திடீரென தீப்பற்றியது. டேக் ஆஃப் ஆவதற்கு சில விநாடிகளே இருந்த நிலையில் தீவிபத்து நிகழ்ந்தது. அதை அறிந்த விமானி உடனடியாக விமானத்தை நிறுத்தி கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தார்.

  உடனடியாக தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர், எனினும் விமானத்தில் இருந்து ஒரு மணி நேரத்துக்குப் பிறகே பயணிகள் இறங்க அனுமதிக்கப்பட்டனர். நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. என்ஜின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த விமானத்தில் 177 பயணிகள், 7 ஊழியர்கள் என மொத்தம் 184 பேர் இருந்துள்ளனர்.

  அந்த 177 பயணிகளுள் குழந்தைகளும் முதியோரும் அதிகமாக இருந்ததாகவும் அவர்கள் வேறு விமானத்தில் பெங்களூரு அனுப்பப்பட்டதாகவும் இன்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக டெல்லி விமான நிலையத்தில் தற்காலிக அவசர நிலை நேற்று இரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய விளக்க அறிக்கையை விரைவில் அளிக்க வேண்டும் என இன்டிகோ நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

  இதையும் படிங்க: கலெக்டரே... மது அருந்துவீர்களா? சர்ச்சை கேள்வி கேட்டு சிக்கிய அமைச்சர்!

  முன்னதாக நேற்று காலை அகமதாபாத்தில் இருந்து டெல்லி வரவிருந்த ஏர் ஆகாசா விமானம் டேக் ஆஃப்பின் போது பறவை மோதியதால் மீண்டும் தரையிறக்கப்பட்டது.இது போன்ற விமான விபத்து சம்பவங்கள் சமீப காலமாக தொடர்ச்சியாக நிகழ்ந்து வருவது பயணிகளை பீதிக்கு ஆளாக்கியுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Delhi, Delhi Airport, Indigo, Indigo Air Service