முகப்பு /செய்தி /இந்தியா / மங்களூரு குண்டுவெடிப்புச் சம்பவம்: தேசிய புலனாய்வு முகமைக்கு வழக்கு மாற்றம்

மங்களூரு குண்டுவெடிப்புச் சம்பவம்: தேசிய புலனாய்வு முகமைக்கு வழக்கு மாற்றம்

என்.ஐ.ஏ

என்.ஐ.ஏ

தீவிரவாதி செயல் என உறுதியான நிலையில் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றி அமைப்பு

  • Last Updated :
  • Tamil Nadu, India

மங்களூரு குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பான வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் நவம்பர் 19ஆம் தேதி ஆட்டோ ஒன்றில் குக்கர் வெடிகுண்டு வெடித்தது. இது தொடர்பாக ஆட்டோவில் பயணம் செய்த ஷாரிக் என்பவர் கைது செய்யப்பட்டு கர்நாடக மாநில போலீஸாரால் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறார்.

இதையும் படிங்க: ராணுவம் குறித்து சர்ச்சை டீவீட் - மன்னிப்பு கோரிய நடிகை ரிச்சா

இதனிடையே இவ்வழக்கை தேசிய புலனாய்வு விசாரணைக்கு மாற்ற கர்நாடக அரசு பரிந்துரைத்தது. அதைத் தொடர்ந்து மங்களூரு குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

First published:

Tags: NIA