பெங்களூருவில் தாய் இறந்தது தெரியாமல் 11 வயது சிறுவன் தாயின் சடலத்துடன் இரண்டு நாள்கள் தங்கியிருந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களுருவில் 40 வயதான அன்னம்மா என்ற பெண் வீடு வேலைகள் செய்து வந்துள்ளார். வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான அவர், வாடகை வீட்டில் தங்கியிருந்து அருகிலுள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு 11 வயதில் ஒரு மகன் இருந்துள்ளார்.
வீட்டு வேலை செய்வதில் கிடைக்கும் பணத்தை வைத்து தனது மகனை படிக்க வைத்து வந்துள்ளார். இந்நிலையில் பிப்ரவரி கடைசியில் சில தினங்களாக அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமாக இருந்துள்ளது.
இதனால் பணிக்கு செல்லாமல் ஓய்வில் இருந்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு தூங்கிக்கொண்டிருந்தபோதே, அவர் உயிர் பிரிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. தாய் இறந்தது தெரியாத சிறுவன், அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் ஓய்வெடுக்கிறார் என நினைத்து, அவரை தொந்தரவு செய்யாமல் இருந்துள்ளான்.
அருகில் இருந்த வீட்டிலிருந்தவர்களிடம், தன் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் சமைக்கவில்லை எனக்கூறி, உணவு மட்டும் வாங்கி சாப்பிட்டுள்ளான். அது மட்டும் இல்லாமல் பள்ளி முடித்து வீட்டிற்கு வந்த இறந்த தாயின் உடலுக்கு அருகிலேயே படுத்து உறங்கியுள்ளான்.
இந்நிலையில் மூன்றாம் நாளும் சிறுவன் பள்ளிக்கு செல்ல, அன்றைய தினம் அன்னம்மாவின் உடலிலிருந்து மோசமாக துர்நாற்றம் வீசத்தொடங்கியுள்ளது. இதனால் அக்கம்பக்கத்தினர் சந்தேகித்து. காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். காவல்துறையினரும் வீட்டை சோதனையிட்ட போது, உண்மை தெரியவந்துள்ளது.
பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த சிறுவனிடம் விசாரித்தபோது, அம்மா ரொம்ப சோர்வா இருந்தாங்க.. அதனால தூங்கிட்டாங்கனு நினைச்சேன் என சொல்லியிருக்கிறான். இதைத்தொடர்ந்து சிறுவனை மீட்டு தாயின் சகோதரர் குடும்பத்திடம் காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.
இதையும் படிங்க : லட்சக்கணக்கில் சம்பளம்... வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு கோயில் பூசாரியான இளைஞர்..!
உடல் உபாதைகளினால் அவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர். இருப்பினும் உடற்கூறாய்வு அறிக்கை வரும்வரையில் எதையும் உறுதிபட தெரிவிக்க முடியாது என்பதால், சந்தேக மரணமென்றே வழக்குப்பதிந்துள்ளது காவல்துறை. அன்னம்மாவின் கணவர் சில வருடங்களுக்கு முன்னர்தான் இறந்திருக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.