சாலை அமைக்க நிலம் தர மறுத்த பெண்களின் காலில் கயிறு கட்டி இழுத்துச் சென்ற திரிணாமுல் கட்சியினர்! வீடியோ

சாலை அமைக்க நிலம் தர மறுத்த பெண்களின் காலில் கயிறு கட்டி இழுத்துச் சென்ற திரிணாமுல் கட்சியினர்! வீடியோ
பெண்களின் கால்களில் கயிறு
  • Share this:
மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு பெண்களின் கால்களில் கயிறை கட்டி ஆளும் கட்சியை சேர்ந்த ஆண்கள் சிலர் சாலையில் இழுத்துச்செல்லும் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலம் தினாஞ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்மிரிகோனா தாஸ் மற்றும் சோமா தாஸ். இவர்கள் குடியிருக்கும் பகுதியில் புதிதாக சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சாலை பணிகள் மேற்கொள்ள அப்பகுதியில் இருக்கும் பொதுமக்களிடம் பஞ்சாயத்துத் தலைவரின் கோரிக்கையின் பேரில் நிலம் கேட்கப்பட்டுள்ளது.

முதலில் 12 அடி அகலம் சாலை அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஊர் பொதுமக்களும் தங்கள் ஊரின் நலன் கருதி சாலை அமைக்க நிலம் கொடுக்க முடிவு செய்தனர்.


இதில் ஸ்மிரிகோனா தாஸும் சம்மதம் தெரிவிக்க சாலை பணிகள் மும்மரமாக தொடங்க ஆரம்பித்து விட்டனர். இதனிடையே 12 அடி அகலம் சாலை அமைக்கப்படும் என கூறிவிட்டு பிறகு 24 அடி அகலத்திற்கு சாலை பணிகள் நடந்துள்ளது.

இதனை அறிந்த ஸ்மிரிகோனா தாஸ் பஞ்சாயத்துத் தலைவர் அமல் சர்காரிடம் முறையிட்டு இதுகுறித்து கேட்டுள்ளார். பிறகு ஆத்திரம் அடைந்த அவர் சாலை பணிகளை மேற்கொள்ள விடாமல் செய்துள்ளார்.

பின்னர் உடன் கேள்வி கேட்ட அவரது சகோதரி சோமா தாஸ் மற்றும் ஸ்மிரிகோனா தாஸ் இருவரையும் ஆளும் கட்சியை சேர்ந்த ஆண்கள் சிலர் கயிறு கட்டி சாலையில் இழுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.


பின்னர் இந்த சம்பவம் குறித்து காவல் துறையில் ஸ்மிரிகோனா தாஸ் புகாரும் அளித்துள்ளார். இதையடுத்து தினாஞ்பூர் மாவட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் அர்பிதா கோஷ், பஞ்சாயத்துத் தலைவர் அமல் சர்காரை கட்சியிலிருந்து தற்காலிகமாக இடை நீக்கம் செய்துள்ளார்.

Also see:


 
First published: February 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading