Home /News /national /

ஒமைக்ரான் பரவல்: மேற்கு வங்கத்தில் நாளை முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு!

ஒமைக்ரான் பரவல்: மேற்கு வங்கத்தில் நாளை முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு!

கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிராவை தொடர்ந்து, மேற்கு வங்கம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிராவை தொடர்ந்து, மேற்கு வங்கம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிராவை தொடர்ந்து, மேற்கு வங்கம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

    ஒமைக்ரான் பரவல் காரணமாக மேற்கு வங்கத்தில் நாளை முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,553 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் நேற்று 35 சதவீதம் பாதிப்பு அதிகரித்துள்ளது. மேலும் தினசரி பாதிப்பு கடந்த 4 நாட்களில் சுமார் 4 மடங்கு வரை அதிகரித்துள்ளது.

    நாட்டில் கொரோனா மொத்த பாதிப்பு 3 கோடியே 48 லட்சத்து 61, 579 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு நேற்று முன்தினம் 5,368 ஆக இருந்த நிலையில், நேற்று 50 சதவீதம் உயர்ந்து 8,067 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மேற்கு வங்கத்திலும் புதிய பாதிப்பு 62 சதவீதம் உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 2,128 பேர் பாதிக் கப்பட்ட நிலையில், நேற்று புதிதாக 3,451 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தினசரி பாதிப்பில் 2-வது இடத்துக்கு மேற்கு வங்கம் சென்றது.

    இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அம்மாநில அரசு நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    Also read: Omicron | உலகை அச்சுறுத்தும் ஒமிக்ரான்... நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

    அதன்படி, நாளை முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவிட்டுள்ளது. அதேபோல், அரசு மற்றும் தனியார் அலுவலங்களில் 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    அதேபோல், ஹரியானா, உத்தர பிரதேசம், டெல்லியை தொடர்ந்து, மேற்கு வங்கத்திலும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை 12 மணி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அத்தியாவசிய தேவை மற்றும் அவசர தேவைகளுக்கு செல்வதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    நிச்சல் குளம், உடற்பயிற்சி மையம், அழகு நிலையம் உள்ளிட்டவைகள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    முடிந்த அளவு வீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்கவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    இரவு 10 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் உணவகங்கள், திரையரங்குகள், மதுபானக்கூடங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், வணிக வளாங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    Also read: வேகமாக பரவும் ஒமைக்ரான்: தற்காலிக மருத்துவமனைகளை தயார்படுத்தவும்.. மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Corona, Lockdown, Omicron

    அடுத்த செய்தி