• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான செமி ஃபைனல் மேற்குவங்க சட்டமன்ற தேர்தல் தான்: யஸ்வந்த் சின்ஹா

2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான செமி ஃபைனல் மேற்குவங்க சட்டமன்ற தேர்தல் தான்: யஸ்வந்த் சின்ஹா

யஷ்வந்த் சின்ஹா

யஷ்வந்த் சின்ஹா

மமதா தன்னையே தியாகம் செய்யத் தயாராக இருந்தார். இதுவே அவர் ஒரு போராளி என்பதை அடையாளப்படுத்தும். இன்றும் அவர் தன்னை போராளியாகவே கட்டமைத்துள்ளார், நாம் அவருக்கு உறுதுணையாக இருந்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று யஷ்வந்த் சின்ஹா கூறினார்.

  • Share this:
மேற்குவங்க தேர்தலை முன்னிட்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா, 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு, மேற்குவங்க சட்டமன்ற தேர்தல் தான் செமி ஃபைனல் என்று தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், சந்திரசேகர் ஆகியோரின் அரசில் நிதித்துறை, வெளியுறவுத்துறை போன்ற முக்கியத்துறைகளின் அமைச்சராக இருந்தார் யஷ்வந்த் சின்ஹா. 2018ம் ஆண்டு பாஜகவின் தேசிய துணைத்தலைவர் பதவி மற்றும் கட்சியிலிருந்தும் ராஜினாமா செய்தார். இந்நிலையில் இன்று கொல்கத்தாவில் உள்ள திரிணாமுல் காங்கிரஸின் தலைமையகத்திற்கு வருகை தந்த யஷ்வந்த் சின்ஹா எம்.பி டெரிக் ஓ பிரையன், சுதிப் பந்தோபாத்யா, சுப்ரதா முகர்ஜி ஆகியோர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய யஷ்வந்த் சின்ஹா, “இந்தியாவின் மற்றும் வங்காளத்தின் எதிர்காலத்தைப் பொருத்தவரை இந்த சட்டமன்ற தேர்தல் மிகவும் முக்கியம்வாய்ந்தது. மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வரும் என்பதில் சந்தேகம் கிடையாது. நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரின் தவறான ஆட்சிக்கு எதிராக முழு நாட்டிற்கும் மேற்குவங்கத்தில் இருந்து உறுதியான செய்தி செல்லட்டும்.

அடல்பிஹாரி வாஜ்பாயின் அரசில் இருந்து இன்றைய மோடி - அமித்ஷாவின் ஆட்சி முற்றிலும் மாறுபட்டது, வாஜ்பாய் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர், ஆனால் இந்த இருவரும் ( மோடி - அமித்ஷா) கைப்பற்றுதல், நொறுக்குதலில் நம்பிக்கை கொண்டுள்ளனர். பாஜகவுடன் யாரும் இல்லை, ஏனென்றால் அவர்கள் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக மாறிவிட்டனர். பாஜகவின் முந்தைய கூட்டணி கட்சிகளை எடுத்துக்கொண்டால் அகாலி தளம், சிவ சேனா போன்ற கட்சிகளும் இன்று பாஜகவில் இருந்து பிரிந்து விட்டனர்.

மமதா ஒரு போராளி. இந்த தேர்தலில் மேற்குவங்கத்தில் இருந்து பாஜகவுக்கு எதிரான ஒரு தெளிவான செய்தி செல்லும் என நம்புகிறேன். இந்த தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும், இதன் மூலம் 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒரு மாற்றம் ஏற்படும். நாம் ஒன்றிணைந்து நாட்டிற்கு தீங்கிழைப்பவர்களுக்கு எதிராக போரிடுவோம்” என பேசினார்.

1999 டிசம்பர் 24 அன்று இந்திய ஏர்லைன்ஸ் விமானம் காந்தகாருக்கு (ஆப்கானிஸ்தான்) கடத்தப்பட்டபோது, அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்டது. என்னால் இப்போதும் நினைவு கூற முடியும், அந்த கூட்டத்தில் பேசிய மமதா பானர்ஜி, தீவிரவாதிகளின் பிடியில் இருந்த பயணிகளை விடுவிக்க நான் அவர்களிடம் பினையாக செல்லத்தயார் ஆனால் அவர்கள் அனைத்து பயணிகளையும் பத்திரமாக விடுவிக்க வேண்டும் என தெரிவித்தார். மமதா தன்னையே தியாகம் செய்யத் தயாராக இருந்தார். இதுவே அவர் ஒரு போராளி என்பதை அடையாளப்படுத்தும். இன்றும் அவர் தன்னை போராளியாகவே கட்டமைத்துள்ளார், நாம் அவருக்கு உறுதுணையாக இருந்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று யஷ்வந்த் சின்ஹா கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: