பிரதமர் மோடி முன்னிலையில் பாஜகவில் இணைகிறாரா சவுரவ் கங்குலி?

பிரதமர் மோடி முன்னிலையில் பாஜகவில் இணைகிறாரா சவுரவ் கங்குலி?

சவுரவ் கங்குலி

ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து தலைவர்கள் வரிசையாய் ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்து வருவதால் இந்த முறை பாஜக மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றி மமதாவுக்கு அதிர்ச்சியளிக்குமா என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

  • Share this:
கொல்கத்தாவின் பரேட் மைதானத்தில் வரும் மார்ச் 7ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் சவுரவ் கங்குலி கலந்து கொள்வார் என தகவல்கள் வெளியான நிலையில் அது தொடர்பாக பாஜக தலைவர் திலீப் கோஷ் முக்கியமான தகவலை தெரிவித்திருக்கிறார்.

பரபரப்புக்கு பஞ்சமில்லாத மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரசியல் நகர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சூழலில் அடுத்த பரபரப்பாக பார்கப்படுவது சவுரவ் கங்குலியின் அரசியல் வருகை. வரும் மார்ச் 7ம் தேதி பிரிகேட் பரேட் மைதானத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் வைத்து பிரதமர் முன்னிலையில் சவுரவ் கங்குலி பாஜகவில் இணையலாம் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.

மமதா பானர்ஜியின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஒரு புறம், அடிபட்ட புலிகளாய் காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி ஒரு புறம், நாடாளுமன்ற தேர்தல் வெற்றி தந்த தெம்புடன் பாஜக ஒருபுறம் என இந்த முறை மும்முனை போட்டி மேற்குவங்காளம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது.

ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து தலைவர்கள் வரிசையாய் ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்து வருவதால் இந்த முறை பாஜக மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றி மமதாவுக்கு அதிர்ச்சியளிக்குமா என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் திரிணாமுல் காங்கிரஸுக்கு பக்க பலமாய் இருக்கும் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், பாஜக மட்டும் 100 தொகுதிகளுக்கு மேல் ஜெயித்துவிட்டால் நான் தொழிலை விட்டே விலகி சென்றுவிடுகிறேன் என்று சவால் விடுத்துள்ளார். ஐபேக்கையே விட்டு விடுகிறேன். நான் வேறு வேலைக்குச் செல்கிறேன், இந்த தேர்தல் உத்திவகுக்கும் வேலையே வேண்டாம் என்று போய் விடுகிறேன் என்று அதிரடியாய் பேசியிருக்கிறார்.

கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு எந்த உத்தியையாவது கையாண்டு மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என தீவிர முனைப்பு காட்டி வரும் பாஜகவில், மேற்குவங்க மாநிலத்தில் செல்வாக்கு பெற்ற பிரபலம் ஆன பிசிசிஐ தலைவரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி தலைவருமான ‘தாதா’ சவுரவ் கங்குலியை அரசியலில் களமிறக்க பாஜக முனைப்பு காட்டி வருவதாக கூறப்படுகிறது, வரும் மார்ச் 7ம் தேதி கொல்கத்தாவின் பிரிகேட் பரேட் மைதானத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமருடன் இணைந்து சவுரவ் கங்குலியும் கலந்து கொள்வார் என்ற தகவல்கள் வெளியானது.

சவுரவ் கங்குலி, பிரதமர் மோடி


சவுரவ் கங்குலி பாஜகவில் இணைவாரா என்ற கேள்வியை மேற்குவங்க பாஜக தலைவர் திலிப் கோஷிடம் கேட்டபோது, இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது, கூட்டத்தில் இதுதொடர்பாக எதுவும் பேசப்படவில்லை என தெரிவித்தார்.

மேலும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வது அவருடைய விருப்பம். உடல்நிலை , காலநிலை இரண்டும் ஒத்துவந்து அவரும் கலந்துகொள்ள முன்வந்தால் அவரை மனதார வரவேற்கிறோம் என தெரிவித்தார்.
Published by:Arun
First published: