Home /News /national /

பாஜகவில் இருந்து விலகுகிறேன் - மேற்குவங்க எம்.எல்.ஏ விலகுவதற்கு சொன்ன காரணம்!

பாஜகவில் இருந்து விலகுகிறேன் - மேற்குவங்க எம்.எல்.ஏ விலகுவதற்கு சொன்ன காரணம்!

BJP

BJP

சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் எம்.பி முகுல் ராய், எம்.எல்.ஏக்கள் பபுல் சுப்ரியோ உள்ளிட்ட பாஜக எம்.எல்.ஏக்கள் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்துள்ளனர்.

பாஜகவில் சதி நடப்பதால் கட்சியில் இருந்து விலகுகிறேன் என தெரிவித்துள்ள மேற்குவங்க பாஜக எம்.எல்.ஏ கிருஷ்ண கல்யாணி,
பாஜகவில் இருந்துகொண்டு என்னால் சாமாணியர்களுக்கு உழைப்பது இயலாத காரியம் என்று தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநில அரசியல் திரிணாமுல் காங்கிரஸ் Vs பாஜக என மாறிவிட்ட நிலையில், அங்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்ற பின்னர் பாஜக எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவராக அக்கட்சியிலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸில் இணைந்து வருகின்றனர்.

சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் எம்.பி முகுல் ராய், எம்.எல்.ஏக்கள் பபுல் சுப்ரியோ உள்ளிட்ட பாஜக எம்.எல்.ஏக்கள் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்துள்ளனர். அந்த வகையில் ராய்கன்ஞ் தொகுதி பாஜக எம்.எல்.ஏ கிருஷ்ண கல்யாணி செய்தியாளர்களை சந்தித்தபோது தான் பாஜகவில் இருந்து விலக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “ராய்கன்ஞ் எம்.பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான தெபஸ்ரீ சவுத்ரி நீண்டகாலமாகவே எனக்கெதிராக சதி செய்து வருகிறார். அவர் என்னை துரோகி என கூறுகிறார். ஆனால் உண்மையில் அவர் தான் தேர்தல் நேரத்தில் என்னை வெற்றிபெறவிடாமல் தடுக்க சதி செய்திருக்கிறார். இது குறித்து மாநில, மத்திய அளவிலான தலைவர்களிடம் தெரியப்படுத்தியும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை, இதன் காரணமாக நான் பாஜகவிலிருந்து விலகுகிறேன். என்னுடைய முடிவு உடனடியாக அமலுக்கு வருகிறது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MLA Krishna Kalyani


பாஜகவிலிருந்து விலகுகிறேன் என எம்.எல்.ஏ கல்யாணி தெரிவித்தபோதும், அவர் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியிருக்கிறாரா என்பது குறித்து குறிப்பிடவில்லை.

அதே நேரத்தில் எம்.எல்.ஏ கிருஷ்ண கல்யாணி, பாஜகவில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸில் சேருவாரா என கேட்டதற்கு அப்படி ஒரு திட்டம் தனக்கில்லை என்றும், என்னுடைய நோக்கமெல்லாம் என் தொகுதி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே, ஆனால் பாஜகவில் இருந்து கொண்டு என்னால் அதை செய்ய முடியாது, எங்கள் பகுதியில் அந்த குறிப்பிட்ட எம்.பி தான் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார், அவர் இருக்கும் வரை ஒன்றும் நடக்காது என தெரிவித்தார்.

Also Read:  Exclusive | முல்லைப் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தால் வறண்ட பாலைவனமாகிவிடுமா கம்பம் பள்ளத்தாக்கு?

எம்.எல்.ஏ கிருஷ்ண கல்யாணியின் குற்றச்சாட்டு குறித்து பேசிய எம்.பி சவுத்ரி, அவர் கூறும் குற்றச்சாட்டுகள் மலிவானவை, பொய்யானவை. உன்மையான பாஜக தொண்டனாக அவருடைய தேர்தல் வெற்றிக்காக நான் அரும்பாடுபட்டேன் என கூறினார்.

எம்.எல்.ஏ கிருஷ்ண கல்யாணி பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையி, அவரை திரிணாமுல் காங்கிரஸுக்கு வரவேற்போம் என திரிணாமுல் எம்.பி சவுகதா ராய் தெரிவித்தார்.
Published by:Arun
First published:

Tags: BJP, Mamata banerjee, TMC

அடுத்த செய்தி