• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மேற்குவங்கத்தில் ஒரே வாரத்தில் இரு மடங்காக உயர்ந்த கொரோனா பரவல்!

மேற்குவங்கத்தில் ஒரே வாரத்தில் இரு மடங்காக உயர்ந்த கொரோனா பரவல்!

corona

corona

கொல்கத்தாவில் பாதிக்கப்பட்டோரில் 150 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியையும், 15 பேர் ஒரு டோஸ் போட்டவர்களாகவும் உள்ளனர்.

  • Share this:
மேற்குவங்க மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் இரு மடங்காக அதிகரித்திருக்கிறது.

இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா வைரஸ் தொற்று பரவல் கேரளா மாநிலம் தவிர்த்து பிற மாநிலங்களில் பெருமளவு கட்டுக்குள் இருந்து வருகிறது. கேரளாவில் கடந்த புதன்கிழமை அன்று 11,150 பேருக்கும், வியாழன் அன்று 8,733 பேருக்கும், வெள்ளியன்று 9,361 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்து வந்த மேற்குவங்கத்தில் தற்போது தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரே வாரத்தில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. அங்கு சமீபத்தில் துர்க்கா பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கொரோனா அதிகரிப்புக்கு காரணம் துர்க்கா பூஜையின் போது விதிகள் சரிவர பின்பற்றப்படாததே ஆகும் என சுகாதாரத்துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்,

கொல்கத்தாவில் கடந்த வெள்ளியன்று 127 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த வார வெள்ளியன்று 242 பேருக்கு வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரில் 150 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியையும், 15 பேர் ஒரு டோஸ் போட்டவர்களாகவும் உள்ளனர். துர்கா பூஜை ஷாப்பிங் மற்றும் வழிபாட்டினால் இந்த விலையை கொல்கத்தா மக்கள் கொடுத்துக் கொண்டிருப்பதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Also read: பெட்டில் படுத்துக்கொண்டே நெட்ஃபிளிக்ஸில் படம் பார்த்தால் ரூ.25 லட்சம் சம்பளம்!

இதனையடுத்து வரும் திங்கட்கிழமை முதல் கொல்கத்தாவில் உள்ள தனிமைப்படுத்துதலுக்கான குவாராண்டைன் மையங்கள், நோயாளிகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என ஒருவர் தெரிவித்தார். கடந்த வாரம் நடைபெற்ற துர்கா பூஜையின் போது விதிகளை பொதுமக்கள் சரிவர பின்பற்றவில்லை, அதுவே இந்த நிலைக்கு காரணம் என சுகாதாரத்துறையினர் குற்றம்சாட்டினர்.

கொல்கத்தா நகர சுகாதார அதிகாரியான அதின் கோஷ் கூறுகையில், அனைத்து சுகாதார அலுவலர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டு, பணியாளர்கள் மீண்டும் வேலையில் இணைய வேண்டும் என் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. துர்கா பூஜையின் போது யாரும் மாஸ்க் அணியவில்லை. நிலைமையை நாங்கள் கண்காணித்து வருகிறோம். வைரஸின் இன்குபேஷன் காலகட்டம் இன்னும் முடியவில்லை” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Also read:  பில் கேட்ஸ் வீழ்ச்சிக்கு இந்த பெண் தான் காரணமா? – பில் கேட்ஸை 2008ல் எச்சரித்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!

மேலும் கொல்கத்தாவில் பாதிக்கப்பட்ட 200 பேர் அறிகுறி இல்லாமல் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர்கள் யாருக்கேனும் தொற்றினை பரப்பியிருக்கலாம் என அஞ்சுவதாக தெர்வித்தனர்.

இதனிடையே கொல்கத்தா மட்டுமல்லாது மேற்குவங்கத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த பரவல் அதிகரித்திருப்பதாகவும், அடுத்த வாரத்தில் இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் எனவும் தெரிவித்தார். மேலும் அடுத்த 7 நாட்களில் தினசரி பாதிப்பு 451 முதல் 833 ஆக அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார். இதில் யார் அதிக பாதிப்புடையவர்களாக இருக்கிறார்கள் என கண்டறிந்து செயல்படுவதே முதல் பணியாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: