ஹோம் /நியூஸ் /இந்தியா /

உயிர்பலி வாங்கும் செல்போன்.. அருவியில் செல்ஃபி எடுக்கும்போது தவறி விழுந்து 4 மாணவிகள் உயிரிழப்பு!

உயிர்பலி வாங்கும் செல்போன்.. அருவியில் செல்ஃபி எடுக்கும்போது தவறி விழுந்து 4 மாணவிகள் உயிரிழப்பு!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

சனிக்கிழமை காலை கர்நாடக - மகாராஷ்டிரா எல்லைப்பகுதியில் அமைந்துள்ள கிட்வாட் நீர்வீழ்ச்சிக்கு மதரஸா மாணவர்கள் 40 பேர் சுற்றுலா சென்றுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karnataka |

பெலகாவியைச் சேர்ந்த நான்கு மாணவிகள் மகாராஷ்டிராவில் உள்ள நீர்வீழ்ச்சியில் சனிக்கிழமை செல்ஃபி எடுக்கும்போது தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

பெலகாவியில் உள்ள உஜ்வால் நகரைச் சேர்ந்த ஆசியா முசாவர் (17), அங்கோலைச் சேர்ந்த குத்ஷியா ஹசன் படேல் (20), ருக்சர் பிஸ்டி (20) மற்றும் பெலகாவியில் உள்ள ஜட்பட் காலனியைச் சேர்ந்த தஸ்மியா ஆகியோர், கர்நாடகாவின் பெலகாவியில் உள்ள காமத் கல்லியில் உள்ள மதரஸாவில் படித்தது வருகிறார்கள்.

சனிக்கிழமை காலை கர்நாடக - மகாராஷ்டிரா எல்லைப்பகுதியில் அமைந்துள்ள கிட்வாட் நீர்வீழ்ச்சிக்கு மதரஸா மாணவர்கள் 40 பேர் சுற்றுலா சென்றுள்ளனர். நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் நின்று கொண்டு செல்பி எடுத்துக்கொண்டிருந்த போது இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீர்வீழ்ச்சி அருகே செல்பி எடுக்க முயன்ற 5 மாணவிகள் கால் இடறி அருகில் இருந்த பள்ளத்தில் இருந்த தண்ணீரில் விழுந்தனர். கரையோரம் நின்றவர்கள் உட்பட யாருக்கும் நீச்சல் தெரியாததால், சிறுமியை மீட்க முடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : துரத்தும் வறுமை.. விடாமல் படிக்கும் பழங்குடி சிறுவர்கள்.. தேடிச்சென்று சந்தித்த பிரதமர் மோடி!

பின்னர் அருகில் இருந்த உள்ளூர் மக்கள் வந்து 5 சிறுமிகளை மீட்க முயன்றனர். தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவளது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மாவட்ட மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் சுயநினைவின்றி இருந்த ஒரு மாணவி, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது அவர் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நீச்சல் தெரியாமல் நீருள் மூழ்கிய 4 சிறுமிகள் பரிதாபமாக உயிர் இழந்தனர்.இந்த துயரச் சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும், மாவட்ட மருத்துவமனையில் ஏராளமானோர் திரண்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வளாகத்தைச் சுற்றி கூடுதல் படைகளை நிறுத்துமாறு போலீஸாரை வற்புறுத்தினார்கள்.


First published:

Tags: Girl students, Karnataka