கோவிலுக்கு ரூ.8 லட்சம் நன்கொடை அளித்த பிச்சைக்காரர்..!

முதுமை காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலை செய்ய இயலாமல் பிச்சை எடுக்கத் தொடங்கியுள்ளார்.

கோவிலுக்கு ரூ.8 லட்சம் நன்கொடை அளித்த பிச்சைக்காரர்..!
முதுமை காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலை செய்ய இயலாமல் பிச்சை எடுக்கத் தொடங்கியுள்ளார்.
  • News18
  • Last Updated: February 15, 2020, 8:27 AM IST
  • Share this:
ஆந்திராவில் பிச்சைக்காரர் ஒருவர் சாய்பாபா கோவிலுக்கு 8 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

71 வயதான யாதி ரெட்டி என்பவர் ரிக்சா இழுத்து, பிழைப்பு நடத்தி வந்துள்ளார். ஆனால், முதுமை காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலை செய்ய இயலாமல் போகியுள்ளது.

இதையடுத்து, விஜயவாடாவில் உள்ள ஒரு கோவிலின் வாசலில் பிச்சையெடுக்க ஆரம்பித்துள்ளார். 7 ஆண்டுகளாக பிச்சையெடுத்து வந்த அவர், இதில், சேமித்த பணத்தில் ஒரு லட்சம் ரூபாயை சாய்பாபா கோவில் மற்றும் கோ சாலை மேம்பாட்டுக்காக நன்கொடையாக வழங்கியுள்ளார்.


இதையடுத்து, தொடர்ந்து பிச்சையெடுக்கும் வருமானம் அதிகரித்ததால், யாதி ரெட்டி இதுவரை கோவிலுக்காக 8 லட்சம் ரூபாய் அளித்துள்ளார்.

  
First published: February 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்