தேசத்தின் பெருமையை காயப்படுத்தும் எந்த சூப்பர் பவருக்கும் தகுந்த பதிலடி கொடுப்போம் - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

தேசத்தின் பெருமையை காயப்படுத்தும் எந்த சூப்பர் பவருக்கும் தகுந்த பதிலடி கொடுப்போம் - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

நாங்கள் போரை விரும்பவில்லை ஆனால் தேசத்தின் பெருமையை காயப்படுத்த நினைக்கும் வல்லரசு தேசங்களுக்கு எங்கள் வீரர்கள் தகுந்த பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறார்கள் என ராஜ்நாத் சிங் கூறினார்

நாங்கள் போரை விரும்பவில்லை ஆனால் தேசத்தின் பெருமையை காயப்படுத்த நினைக்கும் வல்லரசு தேசங்களுக்கு எங்கள் வீரர்கள் தகுந்த பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறார்கள் என ராஜ்நாத் சிங் கூறினார்

 • Share this:
  8 மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் சீனாவுடனான மோதல் சூழல் குறித்து பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாங்கள் போரை விரும்பவில்லை ஆனால் தேசத்தின் பெருமையை காயப்படுத்த நினைக்கும் வல்லரசு தேசங்களுக்கு எங்கள் வீரர்கள் தகுந்த பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறார்கள் என கூறினார்.

  பெங்களூருவில் உள்ள விமானப்படை தலைமை பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற 5வது முன்னாள் ஆயுதப்படை வீரர்கள் தினத்தில் கலந்து கொண்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா எந்த நாட்டுடனும் ஒரு போதும் பிரச்னையில் ஈடுபட நினைக்கவில்லை, அண்டை நாடுகளுடன் அமைதியையும், நட்புறவையுமே விரும்புகிறது.

  நம் ரத்தத்திலும், கலாச்சாரத்திலும் அமைதியும், நட்புறவுமே உள்ளது எனவே தான் நம் அண்டை நாடுகளுடன் நட்பையும், அமைதியையும் கடைப்பிடிக்க விரும்புகிறோம்.

  போரை நாம் விரும்பவில்லை, ஒவ்வொருவரையும் பாதுகாப்பதே நம் லட்சியம் ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகிறேன். நம் நாட்டின் பெருமையை காயப்படுத்த எந்த வல்லரசு நாடேனும் எண்ணினால், நம் வீரர்கள் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்க தயாராக இருக்கின்றனர் என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

  சீனாவுடனான மோதலைப் பற்றி அவர் குறிப்பிடுகையில், இந்திய வீரர்கள் முன்மாதிரியான தைரியத்தையும் பொறுமையையும் வெளிப்படுத்தினர், அதை விவரிக்க முடிந்தால் ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படுவார்கள் என கூறினார், அதே போல பாகிஸ்தான் மண்ணில் தீவிரவாதிகளை வேட்டையாடிய வீரர்களை ராஜ்நாத் சிங் வாழ்த்தினார்.

  இந்நிகழ்ச்சியில் முப்படைகளின் தலைவர் பிபின் ராவத்தும் கலந்து கொண்டார்.
  Published by:Arun
  First published: