அயோத்தியில் ராமர் கோவில் கட்டாததால்தான் பாஜக தோல்வியடைந்தது – விஎச்பி தலைவர்

புருஷோத்தம் நாராயண் சிங்

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் பாஜக ஆட்சி அதிகாரத்தை இழந்ததற்கு காரணம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டாததே என்று விஎச்பி தெரிவித்துள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  ‘அயோத்தியில் ராமர் கோவில் கட்டாததால்தான் 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது’ என்று விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பின் மூத்த தலைவர் புருஷோத்தம் நாராயண் சிங் தெரிவித்துள்ளார்.

  மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தெலங்கானாவில் தெலுங்கானா ராஷ்ட்ர சமிதியும், மிசோரமில் மிசோ தேசிய முன்னணியும் வெற்றி பெற்றன.

  மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் பாஜக ஆட்சி அதிகாரத்தை இழந்ததற்குக் காரணம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டாததே என்று விஎச்பி தெரிவித்துள்ளது.

  அந்த அமைப்பின் மத்திய ஆலோசகர் புருஷோத்தம் நாராயண் சிங் கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு பாஜக எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. இதனால்தான் 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது.

  தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வெற்றி அல்ல. இது ராமபிரானின் பக்தர்களுக்குக் கிடைத்த தற்காலிக ஏமாற்றம்.

  மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்தோர் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு முழு ஆதரவு தெரிவித்தனர். நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு பாஜக மதிப்பளிக்க வேண்டும் என்று புருஷோத்தம் நாராயண் சிங் தெரிவித்தார்.

  Also watch

  Published by:DS Gopinath
  First published: