பியூட்டி பார்லர் செல்வதற்கு முன்னரும்.. பின்னரும்.. பல் மருத்துவரின் அதிர்ச்சிகர அனுபவம்!

லீசா தேவி

அனுபவமற்ற அழகு நிலைய ஊழியரால் தனக்கு இந்த நிலை ஏற்பட்டிருப்பதாகவும், அங்கிருந்த ஸ்டீமர் தரமானதாக இருக்கவில்லை எனவும் மருத்துவர் லீசா தெரிவித்துள்ளார்.

  • Share this:
அழகு மீதான ஈர்ப்பின் காரணமாக சமீப காலமாக ஆண்களும், பெண்களும் பாகுபாடின்றி அழகு நிலையங்களுக்கு படையெடுத்து செல்லத் தொடங்கி விட்டனர். அழகு என்றாலே ஆபத்து என்ற சொல்லுக்கு தகுந்தபடி தனது சகோதரியின் திருமணத்திற்காக தன்னை அழகாக்கிக் கொள்ளும் ஆசையில் அழகு நிலையம் சென்ற பெண் பல் மருத்துவருக்கு அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

அசாம் மாநிலம் கவுகாத்தியின் கோலாகாட் பகுதியைச் சேர்ந்தவர் லீசா தேவி. அங்குள்ள அரசு மருத்துவமனையில் பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். மருத்துவர் லீசா தேவியின் சகோதரிக்கு திருமணம் நடைபெறவுள்ளதால் தனது முகத்தை அழகுபடுத்துவதற்காக அதே பகுதியில் உள்ள புகழ்பெற்ற 'Kaya' எனும் அழகு நிலையத்திற்கு சமீபத்தில் சென்றிருக்கிறார்.

அங்கு சென்று முகத்திற்கு ஃபேசியல் செய்த போது, அழகு நிலைய ஊழியர் தனது பணியின் போது ஸ்டீமரில் இருந்த சூடான தண்ணீர் லீசாவின் முகத்தில் கொட்டிவிட்டது. இதனால் மருத்துவர் லீசாவின் முகம் முழுவதும் வெந்துவிட்டது. இதன் பின்னர் அலறித் துடித்த மருத்துவர் லீசாவை மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

ஒரு பக்கம் சகோதரியின் திருமணம் நடைபெறவுள்ள நிலையில் லீசாவின் முகம் வெந்து போனதால் அவரின் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அனுபவமற்ற அழகு நிலைய ஊழியரால் தனக்கு இந்த நிலை ஏற்பட்டிருப்பதாகவும், அங்கிருந்த ஸ்டீமர் தரமானதாக இருக்கவில்லை எனவும் மருத்துவர் லீசா தெரிவித்துள்ளார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்திலும், நீதிமன்றத்திலும் புகார் அளிக்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.

லீசாவின் முகக் காயம் குணமடைவதற்கு 6 மாதங்கள் வரை ஆகலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் தனது முகத்தை மறைக்கும் மாஸ்கை அணிந்து கொண்டு பணிக்கு திரும்ப இருப்பதாகவும் லீசா கூறியுள்ளார்.

அழகு நிலையத்திற்கு சென்றவருக்கு நேர்ந்த அவலம் குறித்து அறிந்த அசாம்வாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அழகு நிலையங்களுக்கு செல்லும் போது சிறிது கவனமுடன் செயல்பட வேண்டும் என்பதையும் இச்சம்பவம் உணர்த்துவதாக அமைந்துள்ளது.

முன்னதாக இதே போன்ற சம்பவம் நேர்ந்ததாக ஐஐடி கவுஹாத்தியில் படித்த டாக்டர். பினிதா நாத்திற்கும் அரங்கேறியதாக ஃபேஸ்புக் லைவில் தனது அனுபவங்களை பகிர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: