தந்தையின் உடல்நலனுக்காக 1200 கிமீ சைக்கிளில் பயணித்த இந்திய பெண்ணுக்கு இவாங்கா ட்ரம்ப் பாராட்டு..!

ஜோதி குமாரி தேர்ச்சியடைந்தால், தேசிய சைக்கிளிங் அகாடமியில் பயிற்சி மாணவியாக சேர்த்துக்கொள்ளப்படுவார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தந்தையின் உடல்நலனுக்காக 1200 கிமீ சைக்கிளில் பயணித்த இந்திய பெண்ணுக்கு இவாங்கா ட்ரம்ப் பாராட்டு..!
ivanka trump
  • Share this:
உடல்நலமற்ற தன் தந்தையை சைக்கிளின் பின்னால் உட்காரவைத்து 1200 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டி வந்த அன்பின் சாதனையையும், நிலைத்த சிந்தனையும் கொண்ட பிஹார் பெண் ஜோதி குமாரியைப் பாராட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மகள் இவாங்கா ட்ரம்ப்.

ஊரடங்கின் காரணமாக ஹரியானாவின் குருகிராமில் மாட்டிக்கொண்ட ஜோதி குமாரியும், அவரது உடல்நலமற்ற தந்தையும் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என தவித்து வந்துள்ளனர். சைக்கிளிங் செய்வதை தனது ஆசையாக கொண்ட அந்த 15 வயதுச் சிறுமி, 7 நாட்கள் பயணித்து உடல்நலமற்ற தனது தந்தையை பிகாரின் தனது சொந்த கிராமத்துக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்.
1200 கிலோமீட்டரை 7 நாட்களில் பயணித்த ஜோதி குமாரி


அன்பும், நிலைத்த சிந்தனையும் கொண்ட சாதனை, இந்தியர்களையும், அங்கிருக்கும் சைக்கிளிங் கூட்டமைப்பு ஆகியவற்றைக் குறித்து கற்பனைக்கு ஒரு சாட்சியாக இருக்கிறது என புகழ்ந்திருக்கிறார்.

இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பின் தலைவர் ஓம்கார் சிங் இதுகுறித்து பேசுகையில், வைக்கப்படவிருக்கும் சோதனையில் ஜோதி குமாரி தேர்ச்சியடைந்தால், தேசிய சைக்கிளிங் அகாடமியில் பயிற்சி மாணவியாக சேர்த்துக்கொள்ளப்படுவார் எனக் குறிப்பிட்டுள்ளார்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: May 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading