டிக் டாக் காதல் - போலீசார் கண்முன்னே பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்

டிக் டாக் காதல் - போலீசார் கண்முன்னே பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்
  • Share this:
டிக் டாக் வீடியோ மூலம் பழக்கமான காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் காவல் நிலையத்தில் போலீசார் கண்முன்னே பிளேடால் தனது கழுத்தை அறுத்து இளம்பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரியைச் சேர்ந்த வீரபாபு (20), தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ஜூபிலி ஹில்ஸில் பெத்தம்மா கோயில் அருகே வீடு வாடகை எடுத்து தங்கி ஆட்டோ ஓட்டி வருகிறார். ஜூப்லிஹில்ஸ் அருகே இருக்கும் பெல்லிங்மாம்பள்ளியில் உள்ள பியூட்டி பார்லரில் பியூட்டிஷியனாக பணி புரிந்து வருபவர் சோப்னா (20). இருவருக்கும் இடையே கடந்த 5 மாதங்களுக்கு முன்பு டிக்டாக் செயலி மூலம் அறிமுகம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இருவரும் காதலிக்கத் தொடங்கினர்.

இந்நிலையில் வீர பாபு அடிக்கடி தனது அறைக்கு சோப்னாவை அழைத்து சென்று வந்துள்ளார். சோப்னாவிடம் திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து பழகி வந்துள்ளார். இதற்கிடையே இரண்டு வாரங்களுக்கு முன்பு சோப்னா திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வீரபாபுவிடம் கேட்டார். ஆனால் வீரபாபு திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதனால் சோப்னா ஜூபிலி ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


இதையடுத்து வீராபாபு சோப்னா இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார் கவுன்சிலிங் நடத்தி அனுப்பி வைத்தனர். ஆனால் வீரபாபு தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை. இதனால் வீரபாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீண்டும் ஜூபிலி ஹில்ஸ் காவல் நிலையத்திற்கு சோப்னா தனது தாயாருடன் வந்தார். அப்போது போலீசார் வீரபாபுவை காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர். ஆனால் வீரபாபு தனது நிலைப்பாட்டில் மாறவில்லை.

அதனால் கோபமடைந்த சோப்னா தன்னுடன் எடுத்து வந்த பிளேடால் போலீசார் கண்முன்னாலேயே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக போலீசார் சோப்னாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து வீரபாபுவை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: 12,000 கோடியை செலவழித்துவிட்டு இப்போது எதற்காக என்.பி.ஆர்? - தயாநிதி மாறன்
First published: February 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்