முகப்பு /செய்தி /இந்தியா / இந்திய பிரதமருடன் நான்.. மோடியுடனான நினைவுகளை பகிர்ந்து கொண்ட சாகச பிரியர் பியர் கிரில்ஸ்

இந்திய பிரதமருடன் நான்.. மோடியுடனான நினைவுகளை பகிர்ந்து கொண்ட சாகச பிரியர் பியர் கிரில்ஸ்

பிரதமர் மோடியுடன் பியர் கிரில்ஸ்

பிரதமர் மோடியுடன் பியர் கிரில்ஸ்

பிரதமர் மோடி பங்கேற்ற Man vs Wild ஷோவின் ஷூட்டிங்கின் போது எடுத்த புகைப்படம் ஒன்றை நினைவாக தற்போது பியர் கிரில்ஸ் பகிர்ந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

உலகெங்கிலும் சாகச பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான நிகழ்ச்சி டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் Man vs Wild. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ்-ம் பெரும் புகழ் பெற்றவர்.

யாரும் செல்லாத காட்டுக்குள் சென்று பயணம் செய்வது, பாலைவனத்தில் நடப்பது, தண்ணீரில் குதிப்பது என்று பல சாகச செயல்களில் பியர் கிரில்ஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிகழ்ச்சி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் படமாக்கப்பட்டது.

இந்நிலையில் பிரதமர் மோடியுடனான தனது படப்பிடிப்பு அனுபவத்தை பியர் கிரிஸ் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். இதை புகைப்படத்துடன் ட்வீட் செய்த பியர் கிரில்ஸ், "இந்தியப் பிரதமருடன் மிகவும் ஈரமான மழைக்காடு சாகசத்தின் நினைவு! - எனக்கு தெரிந்த இரண்டு விஷயங்கள்: காடுகள் எப்போதும் சிறந்த சமன் நிலையை உருவாக்குபவை. மேலும், இந்த பயணத்தில் எனது படகு கசிந்து கொண்டிருந்தது" என்பது நிச்சயம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியும், பியர் கிரிஸ்சும் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி 2019ஆம் ஆண்டு ஒளிபரப்பானது. "அரசியலை தாண்டி இயற்கையில் என்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அப்போது இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பு வந்ததால் அதை மறுக்காமல் ஏற்றேன்" என்றார் பிரதமர் மோடி.

First published:

Tags: Discovery, Man vs Wild, PM Modi