பிபிசி ரேடியோ லைவ் நிகழ்ச்சியில் மோடியின் அம்மா குறித்து அவமரியாதையாக பேசிய நபர் - கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

பிரதமர் மோடி

பி.பி.சி ரேடியாவில் பங்கேற்ற நபர் ஒருவர் பிரதமர் மோடியின் அம்மா குறித்து அவதூறாக பேசியுள்ளார். அதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.

 • Share this:
  உலக அளவில் தொலைக்காட்சி சேவைகள் வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று பி.பி.சி. தொலைக்காட்சி, இணையதளம், ரேடியோ என உலகின் பல மொழிகளிலும் தனது சேவையை பி.பி.சி வழங்கிவருகிறது. இந்தநிலையில, பி.பி.சி ரேடியோவின் ஆசியா நெட்வொர்க்கில் ரேடியோ விவாத நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அந்த விவாத நிகழ்ச்சியில் இங்கிலாந்தில் சீக்கியர்கள் மற்றும் இந்தியர்களுக்கு எதிரான இனப்பாகுபாடு எவ்வாறு உள்ளது என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது.

  அந்த விவாத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெறும் போராட்டம் குறித்தும் பேசப்பட்டது. அப்போது, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஒருவர் பிரதமர் மோடியின் அம்மா குறித்து மரியாதையற்ற முறையில் பேசியுள்ளார்.

  அந்த ஆடியோ பதிவு ரெக்கார்ட் செய்யப்பட்டு ட்விட்டரில் பரவிய நிலையில், மோடியின் அம்மாவை அவமரியாதையாக பேசியதற்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். பலரும் ரேடியோ ஷோவை தொகுத்து வழங்கியவரை கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர். இத்தகைய அருவருப்பான பேச்சை அனுமதித்துள்ளீர்கள் என்று கண்டித்துவருகின்றனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: