ஹோம் /நியூஸ் /இந்தியா /

பிரதமர் மோடி தொடர்பான ஆவணப்படம்.. ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் மனோபாவம்.. மத்திய அரசு காட்டம்!

பிரதமர் மோடி தொடர்பான ஆவணப்படம்.. ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் மனோபாவம்.. மத்திய அரசு காட்டம்!

பிரதமர் மோடி - பிபிசி ஆவணப்படம்

பிரதமர் மோடி - பிபிசி ஆவணப்படம்

இந்த ஆவணப்படம் ஆங்கிலேயர் ஆதிக்க மனோபாவத்தை காட்டுவதாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி விமர்சித்திருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

பிரதமர் மோடி தொடர்பான பிபிசி ஆவணப்படத்தின் யூடியூப் வீடியோக்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.

பிரதமர் மோடியின் அரசியல் திட்டங்கள் மற்றும் 2002 குஜராத் கலவரம் தொடர்பாக, சர்ச்சைக்குரிய கருத்துகளுடன் பிபிசி ஆவணப்படம் ஒளிபரப்பானது. இதில் குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடிக்கு பங்கு இருப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு மத்திய அரசு தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, இந்த ஆவணப்படம் ஆங்கிலேயர் ஆதிக்க மனோபாவத்தை காட்டுவதாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி விமர்சித்திருந்தார்.

இந்தநிலையில் பிரதமர் மோடி தொடர்பான ஆவணப்படத்தின் யூடியூப் வீடியோக்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. அதுமட்டுமின்றி ஆவணப்படத்தின் காட்சிகளை பகிரும் டிவிட்டர் லிங்குகளும் முடக்கப்பட்டுள்ளன. இதனிடையே முன்னாள் நீதிபதிகள், அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்கள் கூட்டாக எழுதியுள்ள கடிதத்தில், இது ஆங்கிலேய ஆட்சிமுறையின் பிரித்தாளும் சூழ்ச்சி எனவும் இந்து - முஸ்லீம்களை பிரிக்கும் நடவடிக்கைகளில் மீண்டும் ஆங்கிலேயர்கள் இறங்கியிருப்பதாகவும் சாடியுள்ளனர்.

First published:

Tags: Documentary films, PM Modi, Youtube