அரசியல் வியூகவாதியான பிரசாந்த் கிஷோர், "இந்தியாவுக்கான தேர்தல் போர் 2024ல் நடத்தப்பட்டு வெல்வது யார் என்பது அப்போதுதான் முடிவு செய்யப்படும். மாநிலத் தேர்தல் வெற்றிகளை வைத்து
பாஜக உருவாக்கும் கட்டுக்கதைகளை நம்பாதீர்கள் என்று தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஒரு நாள் கழித்து அவர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
5 மாநில தேர்தல் முடிவுகள் குறிப்பாக உத்தரப் பிரதேச பாஜக வெற்றி 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதையடுத்து பிரசாந்த் கிஷோர் இந்த வெற்றிக்கதைகளுக்கு இரையாதீர்கள், பாஜக வெற்றிக்கதைகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
"சாஹேபுக்கு இது தெரியும்! எனவே இது மாநில முடிவுகளைச் சுற்றி வெறித்தனத்தை உருவாக்குவதற்கான ஒரு புத்திசாலித்தனமான முயற்சியாகும், இது எதிர்க்கட்சிகளை வீழ்த்த ஒரு தீர்க்கமான உளவியல் நன்மையை பறைச்சாற்றுவதாக உள்ளது எனவே நம்பாதீர்கள், இரையாதீர்கள்" என்று பிரசாந்த் கிஷோர் கூறினார்.
பிரசாந்த் கிஷோரின் ட்வீட்:
பிரதமர் மோடி உத்தரப்பிரதேச வெற்றியைக் கொண்டு புது டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் பாஜக தொண்டர்களுக்கு அவர் ஆற்றிய உரையில், பிரதமர் மோடி வியாழன் அன்று, “2019 மத்தியில் நாங்கள் அரசாங்கத்தை அமைத்தபோது, வல்லுநர்கள் 2017 ஆம் ஆண்டு உ.பி. வெற்றியே தீர்மானித்ததாகக் கூறினர்... நான் நம்புகிறேன். அதே நிபுணர்கள் 2022 தேர்தல் முடிவுகளைக் கொண்டு 2024 தேசிய தேர்தல்களின் தலைவிதியை தீர்மானித்துள்ளது என்று கூறுவார்கள் என்றார் பிரதமர் மோடி.
இதை எதிர்த்துத்தான் பிரசாந்த் கிஷோர், மாநில தேர்தல் முடிவுகளுக்கும் மத்திய தேர்தல் முடிவுகளுக்கும் சம்பந்தமில்லை, எனவே பாஜக உருவாக்கும் இந்த பொய்க்கதைகளை நம்ப வேண்டாம் என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
403 இடங்களைக் கொண்ட உத்தரப் பிரதேச சட்டசபையில் பாஜக கூட்டணி 273 இடங்களைக் கைப்பற்றி, ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பை முறியடித்தது. உத்தரகாண்டில் உள்ள 70 இடங்களில் 47 இடங்களையும், மணிப்பூரில் 60 இடங்களில் 32 இடங்களையும் வென்றது. கோவாவில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 20 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது.
ஆனால், பஞ்சாபில் மொத்தமுள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 90 இடங்களில் வெற்றி பெற்று அமோக வெற்றி பெற்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.