பள்ளிகள், கல்லூரிகளில் பின்பற்றப்படவேண்டிய அடிப்படை சுகாதார நடைமுறைகள்..

வகுப்பறைக்குள் நுழைதல் மற்றும் வெளியேறுதல் அல்லது மேற்பரப்புகளைத் தொடும் போதெல்லாம், கற்றல் பொருட்கள் மற்றும் புத்தகங்களை தொடுவதற்கு பதிலாக மாற்று வழியை பயன்படுத்துதல் போன்ற முக்கிய தருணங்களில் தவறாமல் கைகளைக் கழுவுதல் அல்லது கை சுத்திகரிப்பாளர்களைப் (hand sanitizers) பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும்.

பள்ளிகள், கல்லூரிகளில் பின்பற்றப்படவேண்டிய அடிப்படை சுகாதார நடைமுறைகள்..
மாதிரி படம்
  • News18
  • Last Updated: November 20, 2020, 1:19 PM IST
  • Share this:
ஆரோக்கியமான வாழ்க்கையை மேம்படுத்த தனிப்பட்ட சுகாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. கை கழுவுதல், குளித்தல், பல் துலக்குதல் மற்றும் முடியை கவனித்துக்கொள்வது தொடர்பான தற்போதைய தகவலின் அளவை மதிப்பிடுவதற்கும், நடத்தை பயிற்சி செய்வதற்கும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று வேலை முதல் பள்ளி வாழ்க்கை வரை நம் அன்றாட வாழ்க்கையின் கிட்டத்தட்ட எல்லா அம்சங்களையும் பாதித்துள்ளது. மாணவர்களைப் பொறுத்தவரை இந்த ஆண்டு பெரும்பாலும் அவர்களது வீடுகளே வகுப்பறையாக இருந்து வருகிறது. 

இருப்பினும்,  பொது இடங்களை படிப்படியாக திறப்பதில் தளர்வுகள் அறிமுகப்படுத்தப்படுவதால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் மாணவர்களை மீண்டும் வரவேற்கத் தயாராகி வருகின்றன. பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதால், பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சூழலில் குழந்தைகள் தங்கள் கல்வியைத் தொடர முடியும் என்பதை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் தங்களை மட்டுமல்ல, அவர்களின் மாணவர்களையும் பாதுகாக்கும் முறைகளை அறிந்து கொள்வது அவசியம். 


மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களிடையே அச்சத்தையும், களங்கத்தையும் உணர்த்தும் கோவிட் -19 பற்றிய போலி தகவல்கள் மற்றும் ஆபத்தான கட்டுக்கதைகளையும் நீக்குவதற்கான பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது.

சுகாதாரத்தின் மிக உயர்ந்த தரத்தை பராமரிக்க, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உலக சுகாதார அமைப்பு வழங்கிய சில அடிப்படை வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை பராமரிக்கும்போது, சில வகுப்பறை விதிகளை ஏற்படுத்துவதும் முக்கியம். 

பள்ளியில் இருக்கும் மாணவர்கள் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூரத்தை பராமரிக்க வேண்டும். மேசை இடைவெளியையும் குறைந்தது ஒரு மீட்டராக அதிகரிக்க வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கை கழுவுவதற்கான 5 படிகளை கற்பிக்க வேண்டும். கிருமிகளின் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கும் மாணவர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் எளிதான வழிகளில் ஒன்று கை கழுவுதல் என்று WHO கூறுகிறது. Also read... இந்தியாவில் நடைபெறும் கோவிட் -19 சோதனைகள் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை..வகுப்பறைக்குள் நுழைதல் மற்றும் வெளியேறுதல் அல்லது மேற்பரப்புகளைத் தொடும்போதெல்லாம், கற்றல் பொருட்கள் மற்றும் புத்தகங்களை தொடுவதற்கு பதிலாக மாற்று வழியை பயன்படுத்துதல் போன்ற முக்கிய தருணங்களில் தவறாமல் கைகளைக் கழுவுதல் அல்லது கை சுத்திகரிப்பான்களைப் (hand sanitizers) பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் நீரின் பயன்பாடு மிகவும் முக்கியமானது. Harpic-News18’s Mission Paani-இன் ஒரு பகுதியாக, சிறந்த சுகாதாரம் மற்றும் நீர் பாதுகாப்பு குறிக்கோள்கள் ஒரு தேசிய தளத்தை அடைந்துள்ளன. இந்த பிரச்சாரம் நாடு முழுவதும் சிறந்த நடைமுறைகளைப் பரப்புவதற்கு உதவியது கவனிக்கத்தக்கது.
First published: November 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading