தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் தயாரிப்பு உபகரணங்களுக்கான சுங்க வரி ரத்து -மத்திய அரசு அறிவிப்பு

தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் தயாரிப்பு உபகரணங்களுக்கான சுங்க வரி ரத்து -மத்திய அரசு அறிவிப்பு

பிரதமர் மோடி

 • Share this:
  இந்தியாவில் கொரோனா இரண்டாவது  அலை மிகத்தீவிரமாக பரவி வருகிறது. பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. பல்வேறு மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். ஆக்சிஜன் பற்றாக்குறையை பல்வேறு மாநில அரசுகள் பிரதமர் மோடியிடம் சுட்டிக்காட்டின. தங்களுக்கு தேவையான ஆக்சிஜன் வழங்குமாறு மாநில முதல்வர்கள் பிரதமரிடம் கோரிக்கை வைத்தனர்.

  கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்டக்குழுவினருடன் நேற்று ஆலோசனையில் ஈடுப்பட்டார். இதில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்து ஆராயப்பட்டது. கடந்த சில வாரங்களாக ஆக்சிஜன் சப்ளையை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

  பிரதமர் மோடி இன்றும் உயர்மட்டக்குழுவினருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் ஆக்சிஜன் தொடர்பான மருத்துவ உபகரணங்கள் மீதான இறக்குமதி வரி ரத்து. கொரோனா தடுப்பூசி மீதான இறக்குமதி வரியையும் ரத்து செய்வதாக உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகளுக்கு 3 மாதத்திற்கு சுங்க வரி ரத்து செய்வதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
  Published by:Ramprasath H
  First published: