கர்நாடக புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை இன்று பதவியேற்பு

பசவராஜ் பொம்மை

பசவராஜ் பொம்மை கடந்த 2008-ம் ஆண்டில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியிலிருந்து விலகி பாஜக-வில் இணைந்தார்.

 • Share this:
  கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள பசவராஜ் பொம்மை, இன்று காலை 11 மணியளவில் பதவியேற்க உள்ளார்.

  கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா, திங்கட்கிழமை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, புதிய முதலமைச்சரை தேர்வு செய்ய பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டம், பெங்களூருவில் நடைபெற்றது. இதில், மேலிடப் பார்வையாளராக மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, தர்மேந்திர பிரதான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

  எடியூரப்பாவும் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் புதிய முதலமைச்சராக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தேர்வுசெய்யப்பட்டார். இதையடுத்து, அவர் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைப்பதற்கான உரிமைக்கோரும் கடித்ததை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பசவரஜ் பொம்மை, இன்று காலை 11 மணிக்கு எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெறும் என கூறினார்.

  Also Read : திரிபுராவில் வீட்டுக்காவலில் ஐ-பேக் ஊழியர்கள் - மீட்பதற்கு அமைச்சர்களை அனுப்பிய மம்தா பானர்ஜி

  61 வயதான பசவராஜ் பொம்மை, எடியூரப்பாவுக்கு மிகவும் நெருக்கமானவர். சதாரா லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த அவர், கடந்த 2008-ம் ஆண்டில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியிலிருந்து விலகி பாஜக-வில் இணைந்தார். அவரது தந்தை எஸ்.ஆர்.பொம்மை, கர்நாடக முதலமைச்சராக பொறுப்பு வகித்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, பசவராஜ் பொம்மையுடன் மூன்று துணை முதலமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: