Basavaraj Bommai : கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றார் பசவராஜ் பொம்மை

பசவராஜ் பொம்மை பதவியேற்பு

கர்நாடகாவின் 24ஆவது முதலமைச்சராக பதவியேற்று கொண்டார் பசவராஜ் பொம்மை.

  • Share this:
    கர்நாடகா மாநிலலத்தின் 24ஆவது முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான பாஜக, அரசு நடந்து வந்தது. வயது மூப்பு மற்றும் உட்கட்சி பூசல் காரணமாக, அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அடுத்த முதலமைச்சராக யார் பொறுப்பேற்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில், புதிய முதலமைச்சரை தேர்வு செய்ய, மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், கிஷன் ரெட்டி ஆகியோரை, பாஜக மேலிடம் மேற்பார்வையாளராக நியமித்தது.

    அதனைத் தொடர்ந்து பெங்களூரு வந்த மேலிடம் மேற்பார்வையாளர்கள் பாஜக அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். எடியூரப்பா, கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டனர். வீரசைவ லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த பசவராஜ் பொம்மை, முருகேஷ் நிரானி, அரவிந்த் பெல்லத் ஆகியோரின் பெயர்கள் முதலமைச்சர் பதவிக்கு இறுதி செய்யப்பட்டன. இதில், பசவராஜ் பொம்மைக்கு அதிக ஆதரவு இருந்ததால் அவரையே தேர்வு செய்வதாக முடிவானது.

    இந்நிலையில், நேற்று இரவு 7:30 மணியளவில், பெங்களூரு ராஜ்பவன் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில், பாஜக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் கூடியது. அங்கு பாஜக சட்டமன்ற குழு தலைவராக பசவராஜ் பொம்மை பெயரை, எடியூரப்பா முன்மொழிந்தார். அப்போது, அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்தனர். முதலமைச்சராக தேர்வானதும், அனைவரையும் வணங்கிய பசவராஜ் பொம்மை, எடியூரப்பாவின் காலில் விழுந்து வணங்கினார்.

    இந்நிலையில், இன்று காலை 11:00 மணிக்கு பசவராஜ் பொம்மை, கர்நாடகாவின் 24ஆவது முதலமைச்சராக பதவியேற்று கொண்டார். அவருக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சராக பதவியேற்று கொண்டதும், பசவராஜ் பொம்மைக்கு ஆளுநர், எடியூரப்பா உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

    பசவராஜ் பொம்மையின் தந்தை எஸ்.ஆர்.பொம்மை, 1988-1989 -ல் கர்நாடக முதலமைச்சராக பதவி வகித்தவர். இரண்டு முறை ராஜ்யசபா எம்.பி.யாகவும், ஒரு முறை எம்.எல்.ஏ.,வாகவும், தேவகவுடா பிரதமராக இருந்தபோது, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராகவும் இருந்தவர்.

    Must Read : கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு - இவர் யார் தெரியுமா?

    பசவராஜ் பொம்மை 1998 மற்றும் 2004 ஆண்டுகளில் இரண்டு முறை ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.சி.,யாக பதவி வகித்தார். முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் அழைப்பின்படி, பாஜகவில் இணைந்த பசவராஜ் பொம்மை 2018ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, எடியூரப்பா தலைமையிலான அரசின் நீர்ப்பாசன துறை அமைச்சராக பதவி வகித்தார். கடந்த, 2013ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ., ஆனார். பின்னர் 2019ல் இருந்து, 2020-ல் கூட்டுறவு துறை அமைச்சராக இருந்தார். தற்போதைய பாஜக அரசில் மாநில உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: