கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு - இவர் யார் தெரியுமா?

பசுவராஜ் பொம்மை

கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பசுவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டார். இவரது தந்தை  எஸ்.ஆர் பொம்மையும் கர்நாடக முதலமைச்சராக இருந்துள்ளார். 

 • Share this:
  கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ந் தேதி எடியூரப்பா 4-வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றார். 75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு பாஜகவில் கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது. எனவே எடியூரப்பா பதவியேற்கும் முன்னரே, 2 ஆண்டுகள் முடிந்ததும் முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை அவரிடம் விதிக்கப்பட்டது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அந்த நிபந்தனையை எடியூரப்பா ஏற்றுக் கொண்டார். அதன்படி எடியூரப்பா முதலமைச்சர் பதவி ஏற்று நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியானது. இதையடுத்து தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து, அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்தது.

  புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான கூட்டம் பெங்களூருவில் உள்ள  ஹோட்டல் கேப்பிடோலில் நடைபெற்றது.   மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான்,  ஜி.கிஷன் ரெட்டி, பாஜக மாநில தலைவர் நலின்குமார் கதீல், முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.  இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சரான  பசவராஜ் பொம்மை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இதையடுத்து அமைச்சரவையும் மாற்றி அமைக்கப்படுகிறது.  எடியூரப்பா கவனித்து வந்த நிதித்துறை, பசவராஜ் பொம்மை கூடுதலாக கவனிக்க உள்ளார். பதவியேற்பு நாளை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  எடியூரப்பாவுக்கு மிகவும் நெருக்கமானவராக பசுவராஜ் பொம்மை  அறியப்படுகிறார். இவரது தந்தை  எஸ்.ஆர் பொம்மையும் கர்நாடக முதலமைச்சராக இருந்துள்ளார்.  மாநில அரசுகளைக் கலைக்க மத்திய அரசு பயன்படுத்தி வந்த 356ஆவது பிரிவுக்கு கடிவாளம் போட்டது பசுவராஜ் பொம்மையின் தந்தை  ‘எஸ்.ஆர் பொம்மை தொடுத்த வழக்காகும்.  மாநில அரசின் நிலைத்தன்மை கேள்விக்கு உள்ளாக்கப்படும் போது எஸ்.ஆர்.பொம்மையின் வழக்கு நினைவுகூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
  Published by:Murugesh M
  First published: