• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • அம்பேத்கர் படத்தை எடுத்துச்சென்ற தம்பதி: கிழித்தெறிந்து அட்டூழியம் செய்த கும்பல்!

அம்பேத்கர் படத்தை எடுத்துச்சென்ற தம்பதி: கிழித்தெறிந்து அட்டூழியம் செய்த கும்பல்!

PANCHKULA, INDIA - AUGUST 21: Six companies of CRPF take out a flag march ahead of final hearing of Dera Sacha Sauda Chief Sant Gurmeeat Ram Rahim Singh in the alleged rape case on August 21, 2017 in Panchkula, India. A special CBI (Central Bureau of Investigation) Court in Panchkula will pronounce its verdict on August 25. Police has beefed up the security and 35 companies has been called as Dera followers have started fortification of dera premises and most can be seen patrolling the 6-7 km area of dera perimeter from both sides with a broomstick in hand. (Photo by Sant Arora/Hindustan Times via Getty Images)

திருமணத்தின் ஒரு பகுதியாக, மணமக்கள் மற்றும் உறவினர்கள் ஊர்வலமாகச் சென்றுள்ளனர். அப்போது, அவர்கள் அம்பேத்கரின் புகைப்படத்தையும் ஏந்திச் சென்றுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    உத்தரப் பிரதேச மாநிலம் ஈட்டா மாவட்டத்தில் திருமண ஊர்வலத்தின்போது அம்பேத்கரின் புகைப்படத்தை ஏந்திச் சென்றபோது அவர்களைத் தாக்கிய ஆதிக்கச் சாதியினர் அம்பேத்கரின் புகைப்படத்தைக் கிழித்தெறிந்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஈட்டா மாவட்டத்திலுள்ள அஸ்ரௌலி கிராமத்தில் கடந்த புதன் கிழமை தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த இளைஞருக்கு திருமணம் நடந்துள்ளது. அந்தத் திருமணத்தின் ஒரு பகுதியாக, மணமக்கள் மற்றும் உறவினர்கள் ஊர்வலமாகச் சென்றுள்ளனர். அப்போது, அவர்கள் அம்பேத்கரின் புகைப்படத்தையும் ஏந்திச் சென்றுள்ளனர்.

    அங்கே, வந்த ஆதிக்கச் சாதியினர் தாழ்த்தப்பட்ட மக்களைத் தாக்கி, அவர்கள் வைத்திருந்த அம்பேத்கர் படத்தை பிடுங்கி கிழித்து எறிந்துள்ளனர். மேலும், தெருவில் ஊர்வலமாகச் செல்ல வேண்டுமென்றால் அம்பேத்கரின் புகைப்படத்தை கொண்டு வரக் கூடாது என்றும் எச்சரித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர், திருமண வீட்டாருக்கு பாதுகாப்பு அளித்தனர்.

    இதுகுறித்து புகார் அளித்தவர் கூறும்போது, ‘மணமக்கள் ஊர்வலமாக வந்து மண்டபத்தை நெருங்கும் வேளையில் அங்கு வந்த ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த சிலர் திடீரென எங்களைத் தாக்கினர். எங்களிடமிருந்த அம்பேத்கரின் புகைப்படத்தைக் கிழித்து எறிந்தனர்’ என்று தெரிவித்தார்.

    இதுகுறித்து தெரிவித்த அந்தப் பகுதி காவல்துறை உதவி ஆணையாளர், ‘தொடக்கத்திலேயே இந்தப் பிரச்னையை தீர்ப்பதற்காக இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால், அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால், இரு தரப்பினரும் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த அந்தக் கிராமத்தில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரையில், இரண்டு தரப்பிலிருந்தும் யாரும் கைது செய்யப்படவில்லை’ என்றார்.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: