பின்விளைவுகள் கடுமையாக இருக்கும்: மத்திய அரசை எச்சரிக்கும் மெஹ்பூபா!

ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் இளைஞர்கள் கைது செய்யப்படுகிறார்கள். ஜமாத்-இ-இஸ்லாமி இயக்கம் சமூக மற்றும் அரசியல் இயக்கம்.

பின்விளைவுகள் கடுமையாக இருக்கும்: மத்திய அரசை எச்சரிக்கும் மெஹ்பூபா!
மெஹ்பூபா முஃப்தி
  • News18
  • Last Updated: March 2, 2019, 9:49 PM IST
  • Share this:
இறைச்சி உண்பவர்களைக் கொலை செய்யும் சிவசேனா, ஆர்.எஸ்.எஸ், ஜன்சங் கட்சிகள் நாட்டில் இருக்கும்போது, ஏழைகளுக்கு உதவும் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பைத் தடை செய்தது ஏன் என்று ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் மத்திய அரசு கடும் நடவடிக்கையில் ஈடுபட்டது. அதன் ஒரு பகுதியாக, காஷ்மீரில் பிரிவினைவாத கட்சியைச் சேர்ந்த 5 தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் போலீசார் பிரிவினைவாத கட்சியின் தலைவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் அப்துல் ஹமிது பியாஸ், செய்தித்தொடர்பாளர் ஜாஹித் அலி ஆகியோரும் அடங்குவர். மேலும், ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு ஐந்து ஆண்டுகளுக்குத் தடை செய்யப்பட்டது. அந்த இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி அந்த அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இந்த விவகாரம் குறித்துப் பேசிய மெஹ்பூபா முஃப்தி, ‘காஷ்மீரை பழிவாங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. குறிப்பாக, ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள், இளைஞர்கள் கைது செய்யப்படுகிறார்கள். ஜமாத்-இ-இஸ்லாமி இயக்கம் சமூக மற்றும் அரசியல் இயக்கம்.

அக்கட்சியைச் சேர்ந்தவர்களை சிறையிலடைப்பதன் மூலம், அந்தக் கட்சியின் சித்தாந்தத்தை சிறையிலடைக்க முடியாது. இறைச்சி உண்பதை காரணமாகச் சொல்லி குண்டர்களைக் கொண்டு மக்களைக் கொல்லும் சிவசேனா, ஜன் சங், ஆர்.எஸ்.எஸ் கட்சிகளுக்கு நாட்டில் இடம் இருக்கிறது. ஏழை மக்களுக்கு உதவும், ஏழைகளுக்காக பள்ளிகள் நடத்தும் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சிறையிலடைக்கப்படுகிறார்கள்.

அந்த இயக்கம் தடை செய்யப்படுகிறது. இதனை நாங்கள் அனுமதிக்க முடியாது. அதற்கான, எதிர் விளைவுகள் கடுமையாக இருக்கும். அந்தப் பள்ளிகள் தடை செய்யப்பட்டால், அதில் படிக்கும் மாணவர்கள் எங்கே போவார்கள்? அரசு எங்களுடைய எதிர்காலத்தில் விளையாடுகிறது. இது தவறான விஷயம். வாளை வைத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்படவில்லை. வாளை எடுக்காத ஜமாத் தடை செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.Also see:

First published: March 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading