ஹோம் /நியூஸ் /இந்தியா /

BANK HOLIDAYS | வங்கிகள் மார்ச் 27 - ஏப்ரல் 4 வரை ஏழு நாள்கள் இயங்காது

BANK HOLIDAYS | வங்கிகள் மார்ச் 27 - ஏப்ரல் 4 வரை ஏழு நாள்கள் இயங்காது

கோப்பு படம்

கோப்பு படம்

இந்தியா முழுவதும் பொதுத்துறை மற்றும் தனியார்துறை வங்கிகளுக்கு ஏழு நாள்கள் விடுமுறை வரவுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  மார்ச் 27-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ம் தேதிக்கு இடையிலான 9 நாள்களில் 7 நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் வரவுள்ளன.  பொதுத்துறை வங்கி ஊழியர்களின் நாடு தழுவிய போராட்டத்தின் காரணமாக, சமீபத்தில் தான் கடந்த வாரம் 4 நாட்கள் வங்கிகள் தொடர்ந்து வங்கி சேவைகள் தடைப்பட்டது. இந்த நிலையில் வரும் வாரத்திலும் தொடர்ச்சியாக வங்கிகளுக்கு விடுமுறை வரவுள்ளது. இந்தமுறை பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கும் 7 நாள்கள் விடுமுறையை எதிர்கொள்ளவுள்ளன.

  வங்கி விடுமுறை நாள்களும் காரணங்களும்:

  மார்ச் 27 - மாதத்தின் நான்காவது சனிக்கிழமை விடுமுறை

  மார்ச் 28 - ஞாயிற்றுக்கிழமை

  மார்ச் 29 - ஹோலி பண்டிகை விடுமுறை

  மார்ச் 30- ஹோலி பண்டிகையின் காரணமாக பாட்னாவில் மட்டும் விடுமுறை

  மார்ச் 31 - நிதி ஆண்டு முடிவு விடுமுறை

  ஏப்ரல் 1 - வங்கிக் கணக்கு முடிப்பு விடுமுறை

  ஏப்ரல் 2 - புனித வெள்ளி விடுமுறை

  ஏப்ரல் 4 - ஞாயிற்றுக் கிழமை

  ஏப்ரல் 6 - தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் விடுமுறை

  வங்கி சேவை தேவை உள்ளவர்கள் விடுமுறை நாள்களைக் கணக்கில் கொண்டு முன்னதாகவே பணிகளை முடித்து கொள்வது நல்லது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Karthick S
  First published:

  Tags: Bank holiday