• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • வங்கி வேலைகளை திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.. பிப்ரவரி மாதத்தில் இந்த நாட்களில் மட்டும் வங்கிகள் செயல்படாது..

வங்கி வேலைகளை திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.. பிப்ரவரி மாதத்தில் இந்த நாட்களில் மட்டும் வங்கிகள் செயல்படாது..

கோப்புப்படம்

கோப்புப்படம்

நாட்டில் ஒவ்வொரு மாநிலத்தைப் பொறுத்தும் பல விடுமுறை நாட்கள் வருகின்றன.

  • Share this:
ஒவ்வொரு மாதமும் பண்டிகை காலங்கள் மற்றும் ஏதேனும் உள்ளூர் விழாக்களுக்கு விடுமுறை வழங்கப்படுவது இயல்பு. இதுபோன்ற பொதுவிடுமுறையின் போது வங்கிகளும் செயல்படுவதில்லை. அதேபோல நாட்டில் ஒவ்வொரு மாநிலத்தைப் பொறுத்தும் பல விடுமுறை நாட்கள் வருகின்றன. அந்த வகையில் பிப்ரவரி மாதத்திலும் குறிப்பிட்ட மாநிலங்கள் உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளன. அந்த நாட்களில் வங்கிகள் செயல்படாது. சிக்கிம் மாநிலத்தில், பிப்ரவரி 12 -ம் தேதி சோனம் லோசர் (Sonam Losar) என்ற திருவிழா கொண்டாடப்படும். எனவே அன்றைக்கு மட்டும் சிக்கிம் மாநிலத்தில் உள்ள வங்கிகள் மூடப்படும்.

மணிப்பூர் மாநிலத்தில், பிப்ரவரி 15-ம் தேதி லூயி-நங்கை-நி (Lui-Ngai-Ni) என்ற திருவிழா கொண்டாடப்படும். எனவே அன்று மாநிலத்தில் அமைந்துள்ள வங்கிகளுக்கு விடுமுறையாக இருக்கும். பசந்த் பஞ்சமி (Basant Panchami) என்ற விழா பஞ்சாப், ஹரியானா, திரிபுரா, மேற்கு வங்கம் மற்றும் ஒரிசா மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. இதன் விளைவாக, மேற்கண்ட மாநிலங்களில் உள்ள வங்கிகள் பிப்ரவரி 16-ம் தேதி அன்று செயல்படாது. மகாராஷ்டிரா மாநிலத்தில், சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தி (Chhatrapati Shivaji Maharaj Jayanti) பிப்ரவரி 19-ம் தேதி கொண்டாடப்படுகிறது. எனவே அந்த நாளில் மாநிலத்தில் உள்ள வங்கிகள் மூடப்படும்.

அதேபோல பிப்ரவரி 20-ம் தேதி, இரண்டு மாநிலங்களுக்கு மாநில விடுமுறைகள் உள்ளன. அன்றைய தினத்தில் மிசோரம் மாநில தினம் மற்றும் அருணாச்சல பிரதேச மாநில தினம் அனுசரிக்கப்படுகிறது. எனவே இந்த இரண்டு மாநிலங்களிலும் பிப்ரவரி 20-ம் தேதி அன்று வங்கி சேவைகள் இயங்காது. இதனை தொடர்ந்து ஹஸ்ரத் அலி பிறந்தநாளை முன்னிட்டு, உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வங்கிகள் பிப்ரவரி 26-ம் தேதி அன்று மூடப்படுகிறது. எனவே, வார விடுமுறைகளைத் தவிர்த்து  பிப்ரவரி மாதத்தில் சுமார் 8 நாட்களுக்கு உள்ளூர் விடுமுறைக்காக வங்கிகள் மூடப்படுகின்றன.

மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகளில்  வங்கிகள் மூடப்படுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல்களின் படி, வங்கிகள் ஒன்றாம், மூன்றாம் சனிக்கிழமைகளில் அரை நாள் திறந்திருக்கும். 2015-ம் ஆண்டில், அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் (பி.எஸ்.யூ) வங்கிகள் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மூடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, குடியரசு தினம் (ஜனவரி 26), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15) மற்றும் காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2) ஆகிய தேசிய விடுமுறை நாட்களில் நாடு முழுவதும் அனைத்து வங்கிகளும் மூடப்படும். இந்த தேசிய விடுமுறைகள் தவிர, பல மாநில விடுமுறைகள் உள்ளன. இந்த மாநில விடுமுறைகளும் வங்கி விடுமுறையாக இருக்குமா இல்லையா என்பது அந்த வங்கி அமைந்துள்ள மாநிலத்தைப் பொறுத்து தான் அமைகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ram Sankar
First published: