Home /News /national /

Bank Employees Strike | வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்.. ரூ.600 கோடி வர்த்தகம் பாதிப்பு

Bank Employees Strike | வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்.. ரூ.600 கோடி வர்த்தகம் பாதிப்பு

புதுச்சேரியில் வங்கி ஊழியர்கள் போராட்டத்தால் ரூ.600 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் வங்கி ஊழியர்கள் போராட்டத்தால் ரூ.600 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் வங்கி ஊழியர்கள் போராட்டத்தால் ரூ.600 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மசோதாவை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கொண்டு வருவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் இந்த மசோதாவை கைவிட வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தன. இரண்டு நாட்கள் இந்த போராட்டம் நடைபெறுவதால், வங்கி சேவைகள் பெருமளவில் பாதிக்கப்படலாம் என்ற கவலை எழுந்தது.

Also Read : வாட்டர் ஹீட்டர் ஆர்டர் செய்த நபருக்கு மேகி அனுப்பிய அமேசான்

அதன்படி புதுச்சேரியில் உள்ள அனைத்து வங்கிகளிலும் பணிபுரியும் 1400 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் வங்கி ஊழியர்கள் 300க்கும் மேற்பட்டோர் யூகோ வங்கி தலைமை அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். மேலும் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை உடனடியாக கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Also Read : விண்வெளிக்கு சென்று உணவு ஆர்டரை டெலிவரி செய்த கோடீஸ்வரர்... வைரல் வீடியோ

இதுகுறித்து வங்கியின் கன்வீனர் முரளிதரன் கூறுகையில், புதுச்சேரியில் வங்கிகளில் பணிபுரியும் 1400 ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 600 கோடி ரூபாய்க்கு புதுச்சேரியில் வங்கி வர்த்தகம் பாதிக்கும் என தெரிவித்தார்.
Published by:Esakki Raja
First published:

Tags: Puducherry

அடுத்த செய்தி