Home /News /national /

Bank Strike | வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தம் - ஏடிஎம் சேவைகள் பாதிக்கும் அபாயம்

Bank Strike | வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தம் - ஏடிஎம் சேவைகள் பாதிக்கும் அபாயம்

Bank Strike

Bank Strike

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து வங்கி ஊழியர்கள் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    இன்று முதல் இரண்டு நாட்களுக்கு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடக்க இருப்பதால் ஏடிஎம் சேவைகள் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

    பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து வங்கி ஊழியர்கள் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. இன்றும், நாளையும்  (டிசம்பர் 16, 17) என இரண்டு நாட்கள் இந்த போராட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வங்கி சேவைகள் பெருமளவில் பாதிக்கப்படலாம் என்ற கவலை எழுந்துள்ளது.

    குறிப்பாக ஏடிஎம் சேவைகள் இந்த வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்படக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.



    நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ, வாடிக்கையாளர் நலன் கருதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம் என தங்களின் ஊழியர்களை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் பெருந்தொற்று காலத்தினால் ஏற்பட்டுள்ள நிலைமை வாடிக்கையாளர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால் வேலை நிறுத்தம் குறித்து பரிசிலிக்குமாறு தனது ஊழியர்களை கேட்டுக்கொண்டிருக்கிறது.

    Also read:  பெட்ரோல், டீசல் மூலம் 8 லட்சம் கோடி ரூபாய் வருமானம் - நிர்மலா சீதாராமன் தகவல்

    அதே நேரத்தில், பஞ்சாப் நேஷனல் வங்கி, செண்ட்ரல் இந்தியன் வங்கி, ஆர்பிஎல் போன்ற வங்கிகள் வேலை நிறுத்தம் குறித்து தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இரண்டு நாட்கள் நடைபெறவிருக்கும் வேலை நிறுத்தத்தால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், இருப்பினும் சில வங்கிக் கிளைகளில் பணிகள் பாதிக்கப்படலாம் எனவும் கூறியிருக்கிறது.

    எந்தெந்த சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருக்கின்றன?

    1.National Confederation of Bank Employees (NCBE)
    2. Indian National Bank Employees Federation (INBEF),
    3. Bank Employees Federation of India (BEFI)
    4. National Organisation Of Bank Workers (NOBW) 5. All India Bank Officers' Confederation (AIBOC)
    6. National Organisation of Bank Officers (NOBO)

     

     
    Published by:Arun
    First published:

    Tags: Bank Strike

    அடுத்த செய்தி