வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும்..! வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு உறுதி

கோப்புப்படம்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி ஒன்றாம் தேதிகளில் நடைபெறும் என வங்கி ஊழியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

  ஊதிய உயர்வு குறித்து விரைவாக முடிவு எடுக்கக் கோரி போராட்டம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் போராட்ட அறிவிப்பை கைவிடுவது தொடர்பாக மத்திய தொழிலாளர் நல ஆணையர் ராஜன் வர்மா முன்னிலையில் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

  அதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

   
  Published by:Sivaranjani E
  First published: