ஹோம் /நியூஸ் /இந்தியா /

வங்கி ஊழியர்கள் வரும் 19ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு

வங்கி ஊழியர்கள் வரும் 19ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு

கோப்பு படம்

கோப்பு படம்

அனைத்து வங்கிகளிலும் உள்ள அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கத்தினர் வரும் 19ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிப்பு

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

   இந்தியா முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் வரும் 19ம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

  அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்த தேவிதா துல்ஜ்புர்கார் 1ம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் சொல்லியிருப்பதாவது, வங்கி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் வங்கி நிர்வாகங்கள் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கின்றனர். இரு தரப்பும் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கும் வழக்கத்தை கைவிட்டு விட்டனர்.

  தீர்வு தொடர்பான அனைத்து விதிகளையும் இருதரப்பும் மீறி வருகின்றன. மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கும் வங்கி நிர்வாகங்கள் செவி சாய்ப்பதில்லை. அவர்கள் நிர்வாகத்திற்கும் பணியாளர்களுக்கும் இருக்கும் உறவை அலட்சியப்படுத்துகிறார்கள்.

  பேங்க் ஆப் மகாராஷ்ட்ரா, பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, செண்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பெடரல் வங்கி, சொனாலி வங்கி, கத்தோலிக் சிரியன் வங்கி, கனரா வங்கி ஆகிய வங்கிகளின் நிர்வாகத்தினர் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகினறனர். இவர்களின் செயல் வங்கி ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

  எனவே, அனைத்து வங்கிகளிலும் உள்ள அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கத்தினர் வரும் 19ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். இந்த வேலைநிறுத்தம் தவிர்க்க முடியாதது. இவ்வாறு அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Bank, Bank Strike