• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் : பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு.

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் : பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு.

கோப்பு படம்

கோப்பு படம்

வேலைநிறுத்த அறிவிப்பை கைவிடக் கோரி மத்திய அரசு சார்பில் வங்கி ஊழியர்கள் சங்கத்துக்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

  • Share this:
வங்கிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து மார்ச் 15,16 ஆகிய இரண்டு நாட்கள் தேசிய அளவில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் வேலை நிறுத்தத்தை திரும்பப் பெறுவது தொடர்பாக மத்திய தொழிலாளர் நலத்துறை ஆணையர் நேஹி நாளை டெல்லியில் சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டின் வளர்ச்சி திட்டத்திற்குச் சேவையான நிதியைத் திரட்டும் நோக்கில் அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யும் திட்டத்தில் 2020ல் மத்திய அரசு பின்னடைவை சந்தித்த  நிலையில், 2022 ஆம் நிதியாண்டில் திட்டமிட்டபடி 1.75 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை அரசு பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்தது.

இதன்படி, சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் அறிக்கையில்  இரு அரசு வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்று அறிவித்தார். இதன் மூலம் ₹ 1.86 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தது.  இந்த அறிவிப்பு வங்கி பங்கு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பு பெற்றாலும், வங்கி ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு நிலவுகிறது.

இதையடுத்து, அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்புகள், ஏஐபிஇஏ, ஏஐபிஓசி, என்சிபிஇ, ஏஐபிஓஏ, பிஇஎப்ஐ, ஐஎன்பிஓசி, என்பிபிசி, என்ஓபிஓ ஆகிய சங்கங்கள் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தியது. அதன் பின்னர், மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து, வரும் மார்ச் 15 மற்றும் 16 ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் 10 லட்சம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டது. வங்கி ஊழியர்களுக்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கங்களும், வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர் உள்ளனர்.

இந்நிலையில், வேலைநிறுத்த அறிவிப்பை கைவிடக் கோரி மத்திய அரசு சார்பில் வங்கி ஊழியர்கள் சங்கத்துக்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது. தொழிலாளர் நலத்துறை ஆணைய நெஹி தலைமையில் நாளை டெல்லியில் பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும், வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சங்கங்கள் தங்களுடைய கருத்துகளை பேச்சுவார்த்தையில் தெரிவிக்கலாம் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"நாளை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு பங்கேற்கும் எனவும், மத்திய அரசு தொடர்ந்து அதன் நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருந்தால், போராட்டம் தீவிரமடைந்து, காலவரையற்ற போராட்டம் நடத்த வேண்டியது இருக்கும். மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்", என அதன் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: