ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படும் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களிலும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Web Desk | news18
Updated: March 29, 2019, 11:55 AM IST
ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படும் -  ரிசர்வ் வங்கி அறிவிப்பு
ரிசர்வ் வங்கி
Web Desk | news18
Updated: March 29, 2019, 11:55 AM IST
மார்ச் 31-ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) வங்கிகள் மற்ற நாட்களைப் போல் வழக்கமாக செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வருகின்ற மார்ச் 31-ம் தேதி நடப்பு நிதியாண்டின் கடைசி நாள் ஆகும். அதனால் இதையொட்டி அனைத்து துறை நிறுவனங்களும் தங்களது வரவு செலவு கணக்கை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

அதனால், அன்று விடுமுறை விடப்பட்டால், அரசுக்கும், நிறுவனங்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், வருகிற ஞாயிற்றுக்கிழமை அனைத்து வங்கிகளும் வழக்கம்போல் செயல்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மேலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களிலும், ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மார்ச் 30-ம் தேதி இரவு 8 மணி வரையிலும், மார்ச் 31-ம் தேதி மாலை 6 மணி வரையிலும், வங்கிகளை  திறந்து வைத்திருக்க வேண்டும் என்று அனைத்து வங்கிகளையும், ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.

Also see... ஐபிஎல்: முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ் 
First published: March 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...