முகப்பு /செய்தி /இந்தியா / ’சாக்லெட்’ வாங்க இந்தியாவுக்குள் நுழைந்த வங்கதேச சிறுவன் - கைது செய்த பாதுகாப்பு படை

’சாக்லெட்’ வாங்க இந்தியாவுக்குள் நுழைந்த வங்கதேச சிறுவன் - கைது செய்த பாதுகாப்பு படை

காட்சி படம்

காட்சி படம்

இமான் ஹோசைன் என்ற சிறுவன், தன் மனதுக்கு பிடித்தமான சாக்லேட் வாங்குவதற்காக அவ்வபோது இந்தியாவுக்குள் ஊடுருவுவதை வாடிக்கையாக செய்து வந்திருக்கிறார்.

சாக்லேட் வாங்குவதற்காக நதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவிய வங்கதேச சிறுவனை, எல்லைப் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். இந்தியா - வங்கேதேச நாடுகளுக்கான இடையிலான எல்லைப் பகுதியில் ஷால்டா நதி அமைந்துள்ளது. இந்த நதியை ஒட்டி அமைந்துள்ள கிராமத்தைச் சேர்ந்த இமான் ஹோசைன் என்ற சிறுவன், தன் மனதுக்கு பிடித்தமான சாக்லேட் வாங்குவதற்காக அவ்வபோது இந்தியாவுக்குள் ஊடுருவுவதை வாடிக்கையாக செய்து வந்திருக்கிறார்.

திரிபுரா மாநிலத்தின் ஷிபாஹிஜாலா மாவட்டத்தில் உள்ள கலம்சோரா என்னும் கிராமத்தை ஒட்டி எல்லையில் அமைக்கப்பட்டுள்ள வேலியில் இருக்கும் துளையைப் பயன்படுத்தி உள்நுழைந்து சாக்லேட் வாங்கிக் மீண்டும் வீடு திரும்புவதை வாடிக்கையாக செய்து வந்துள்ளார். எனினும், சிறுவனின் இந்த சாகசப் பயணம் கடந்த 13ஆம் தேதியுடன் நிறைவுக்கு வந்திருக்கிறது. இந்த முறை இந்தியாவுக்குள் ஊடுருவி வந்த போது எல்லைப் பாதுகாப்பு படையினரிடம் அவர் சிக்கிக் கொண்டார்.

15 நாள் நீதிமன்றக் காவலில் அடைப்பு

கைது செய்யப்பட்ட சிறுவனை, அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் எல்லைப் பாதுகாப்பு படையினர் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் அந்தச் சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, சிறுவனை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுகுறித்து காவல் அதிகாரி பனோஜ் பிப்லப் தாஸ் கூறுகையில், “வங்கதேசத்தின் கோமிலா மாவட்டத்தைச் சேர்ந்தவர் இந்தச் சிறுவன் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சாக்லேட் வாங்குவதற்காக அடிக்கடி இந்திய எல்லைக்குள் ஊடுருவியதை அவர் ஒப்புக் கொண்டார்.

also read : தலையற்ற முண்டமாக வலம் வந்த நபர்.. கூகுள் மேப்பில் இருந்த படத்தால் பரபரப்பு

சிறுவனிடம் வங்கதேச கரண்ஸியான 100 டாக்கா மட்டுமே இருந்தது. அதே சமயம், சட்ட விரோதமான பொருள்கள் எதையும் அவர் வைத்திருக்கவில்லை. முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாமல் இந்தியாவுக்குள் ஊடுருவிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சிறுவனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’’ என்று தெரிவித்தார். அதே சமயம், சிறுவனின் குடும்பத்தார் யாரும் இதுவரையில் இந்திய தரப்பு அதிகாரிகளை அணுகவில்லை என்று கூறப்படுகிறது.

எல்லையில் வேலி பாதுகாப்பு

எல்லையில் மிகுந்த சிக்கலான நில அமைப்பு கொண்ட ஒரு சில பகுதிகளில் வேலி இல்லை என்று எல்லை பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். இதுகுறித்து, எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் சிலர் கூறுகையில், “சோனமுரா பகுதியை ஒட்டிய சர்வதேச எல்லைப் பகுதியில் மிக பலமான வேலி அமைக்கப்பட்டுள்ள போதிலும் ஊடுருவல் தொடர்கிறது. கலம்சோரா கிராமத்தில் உள்ள பல வீடுகள் எல்லைக் கோடுகள் மீது அமைந்துள்ளன. சிக்கலான நில அமைப்பு கொண்ட சில இடங்களில் வேலி இல்லை’’ என்று தெரிவித்தனர்.

also read : 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு இரு மடங்காக உயர்வு... சுகாதாரத்துறை அதிகாரிகள் அலெர்ட்...

அடிக்கடி வந்து செல்லும் வங்கதேசிகள்

வங்கதேசத்தில் இருந்து அந்நாட்டு மக்கள் அடிக்கடி இந்தியாவிற்குள் ஊடுருவி வருகின்றனர் என்று கலம்சோரா கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து இலியஸ் ஹொசைன் என்பவர் கூறுகையில், “மளிகை பொருட்கள் வாங்குவதற்காகவும், சில சமயம் சமூக நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவும் வங்கதேசிகள் அடிக்கடி இங்கு ஊடுருவி வருகின்றனர். பொதுவாக எல்லைப் பாதுகாப்புப் படையினர் அவர்களை மனிதாபிமான அடிப்படையில் விட்டு விடுகின்றனர். அதே சமயம், கடத்தல்காரர்கள், போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், இப்போது அந்தச் சிறுவன் சாக்லேட் வாங்குவதற்காக ஊடுருவி வந்துள்ளார்’’ என்றார்.

First published:

Tags: India