ஹோம் /நியூஸ் /இந்தியா /

முதியவரை ஒரு கிலோ மீட்டர் சாலையில் தரதரவென இழுத்து சென்ற டூவீலர்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!

முதியவரை ஒரு கிலோ மீட்டர் சாலையில் தரதரவென இழுத்து சென்ற டூவீலர்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!

பைக்கில் தரதரவென இழுத்து செல்லப்பட்ட நபர்

பைக்கில் தரதரவென இழுத்து செல்லப்பட்ட நபர்

சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Bangalore [Bangalore], India

கர்நாடகாவில் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற இருசக்கர வாகனத்தை நபர் ஒருவர் சாலையில் பிடித்தபடி துரத்திச் சென்ற அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது. பெங்களூருவில் இருசக்கர வாகனத்தில் சென்ற சாஹில் என்ற நபர் முன்னால் சென்ற கார் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் தப்பிச் செல்ல முயற்சித்தார். ஆனால் அவரைத் தப்பிக்க விடாத கார்க்காரரான முத்தப்பா இருசக்கர வாகனத்தின் பின்னால் உள்ள கைப்பிடியை பிடித்தவாறு சாலையில் படுத்தபடியே துரத்திச் சென்றார். அப்போது சாலையில் தரதரவென அவர் இழுத்துச் செல்லப்பட்டார்.

சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தினர். அதில் அவர் சிராய்ப்பு ஏற்பட்டு காயமடைந்தார். இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை செய்த போலீஸார், சாஹிலைக் கைது செய்தனர்.

First published:

Tags: Accident, Bangalore, Viral Video