Home /News /national /

காற்று மாசுவால் தற்போது அபாய கட்டத்தில் உள்ள பெங்களூரு மாநகரம்

காற்று மாசுவால் தற்போது அபாய கட்டத்தில் உள்ள பெங்களூரு மாநகரம்

காற்று மாசுபாடு(மாதிரிப் படம்)

காற்று மாசுபாடு(மாதிரிப் படம்)

காற்று மாசுவால்  இதுவரை 1.2 மில்லியன் இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் . அதோடு மொத்த உள்நாட்டு உற்பத்தியும் 3% பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள மாநகரங்களில் பெங்களூரு மாநகரும் ஒன்றாக திகழ்கிறது.

காற்று மாசுவால்  இதுவரை 1.2 மில்லியன் இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் . அதோடு மொத்த உள்நாட்டு உற்பத்தியும் 3% பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள மாநகரங்களில் பெங்களூரு மாநகரும் ஒன்றாக திகழ்கிறது. உடல் உபாதைகளை தாண்டி காற்று மாசு ஒரு பகுதியின் வளர்ச்சியை பாதிக்கிறது.

கிரீன் பீஸ் இந்தியா என்ற அமைப்பு 2015-16 ஆண்டில் பல மாநிலங்களிடையே ஒரு ஆய்வை நடத்தியது. கர்நாடக மாநிலத்தில் 21 இடங்களிலும் இந்த  ஆய்வு நடத்தப்பட்டது, அதில் பெங்களூரு மாநகரில்தான் அதிக அளவில் காற்று மாசு ஏற்பட்டுள்ளதாகவும் பெங்களூருவை தொடர்ந்து தும்கூர் என்ற பகுதியில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

“காட்டன் சிட்டியில் இருத்து கார்பேஜ் சிட்டியாக தரம் தாழ்ந்தது பெங்களூரு மாநகர். தொடர்ந்து மாநகரில் உள்ள மரங்களை வெட்டியது, வானளவு உயர்ந்த கான்கிரிட் கட்டிடங்களை தெரு முழுவதும் அமைத்தது, வாகனம் மற்றும் தொழிற்சாலைகள் அதிகமானது ஆகியவையே பெங்களூரு மாநகர் பொலிவிழந்ததற்கு காரணம்” என்று பெங்களூருவைச் சேர்ந்த நகர்புற பாதுகாப்பு நிபுணர் திரு விஜய் நிஷாந்த் குற்றஞ்சாட்டுகிறார்.

வாகனங்களால் 42%,  சாலையில் உள்ள தூசுகளால் 20%, கட்டிட மாசுவால் 14%, தொழிற்சாலைகளால் 14% , டீசல் ஜெனரேட்டர்களால் 7% மற்றும் வேறு சில மாசுபாட்டால் 3 சதவிகிதமும் என கண்ணுக்கு தெரியாத துகள்களால் காற்று மாசடைந்துள்ளது என்று எரிசக்தி மற்றும் வள நிறுவனத்தின் ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

வாகனங்களில் இருந்து வரும் நச்சு புகையில் நைட்ரஜன் ஆக்சைடு (68%). தொழிற்சாலைகளில் இருந்து சல்பர் டை ஆக்சைடு(56%), டீசல் ஜெனரேட்டர்களில் இருந்து வரும் நச்சுப்புகை(23%) ஆகியவையால் தான் மாநகரின் காற்று அதிகமாக மாசடைகின்றது என இந்த ஆய்வு மேலும் தெரிவித்துள்ளது.

தரவுகள்:ஆர்போகேலப்சி கிரீன் பீஸ் அறிக்கை (Source- Airpocalypse Greenpeace report)


காற்றில் மாசுவை ஏற்படுத்தும் கண்ணுக்குத்தெரியாத துகள் 19 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக உயர்ந்துள்ளதற்கு காரணம் வாகனங்களில் இருந்து வரும் மிகச்சிறிய துகள்கள்தான் என்ற அதிர்ச்சியை தரும்  மற்றொரு தகவலையும்அதே அறிக்கை மேலும் தந்துள்ளது.

காற்று மாசுவிற்கு மற்றொரு பெரிய காரணம் டீசல் ஜெனரேட்டர்களே ஆகும். டீசல் ஜெனரேட்டர்களால் காற்றில்  10 மைக்ரோமீட்டர்  அளவிலான மாசு 13 சதவிகிதமும் 2.5 மைக்ரோ மீட்டர் அளவிலான மாசு 25 சதவிகிதமும் ஏற்படுகிறது.

மேலும் தொழிற்சாலைகளில் இருந்து வரும் காற்று மாசு பெங்களூரு மாநகரில் குறைவாகவே உள்ளது. ஏனெனில் மாநகரில் பெரிய தொழிற்சாலைகள் ஏதும் இதுவரை அமைக்கப்படவில்லை. எனினும் பீனியா தொழிற்பேட்டையால் மாசு ஏற்படுகிறது. ஆனால் அதன் அளவு குறைவாகவே உள்ளது. அதாவது 10 மைக்ரோமீட்டர் என்ற அளவில் மாசை ஏற்படுத்தவில்லை. மாறாக 2.5 மைக்ரோ மீட்டர் என்ற அளவில் தான் இவை மாசை ஏற்படுத்துகின்றன.

தரவுகள்:ஆர்போகேலப்சி கிரீன் பீஸ் அறிக்கை (Source- Airpocalypse Greenpeace report)


அதிகரித்து வரும் காற்று மாசு, நகரமயமாக்கல், மற்றும் அதீத சமூக பொருளாதார வளர்ச்சி ஆகியவை சக்கரை வியாதி, ரத்த அழுத்தம், ஆஸ்துமா, இதய மற்றும் நாள்பட்ட சுவாச நோய்களுக்கு வழிவகுக்கும். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களிடையே அதிக தாக்கத்தை இவை ஏற்படுத்தும் என்று அறிக்கை மேலும் விவரிக்கிறது.

மாதிரி படம்


தொற்றாத நோய்களின் தாக்கம் (non communicable diseases) தற்போது பெங்களூருவில் அதிகரித்து விட்டதாகவும் இதற்கு காரணம் காற்று மாசு என்றே தெரிகிறது. மேலும் 2016 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் நுரையீரல் மருத்துவரை சந்திக்க பெறப்பட்டுள்ள அப்பாயின்மெண்டுகளை கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால் அது 62% அதிகரித்திருக்கிறது என பிராக்டோ (Practo report,)அறிக்கை தெரிவிக்கிறது. 35 மாநகரங்களில் மக்களிடையே அதிகமாக உள்ள நோய்கள் மற்றும் உடல் உபாதைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கையை தயார்செய்துள்ளது இந்த பிராக்டோ நிறுவனம்.

அந்த அறிக்கையின்படி பெங்களூரு மாநகரில் தான் ஒவ்வொரு வருடமும் நுரையீரல் மருத்துவரை சந்திப்பது 80% அதிகரித்துள்ளதாகவும் அதற்கு அடுத்தபடியாக 64% மும்பையிலும் மற்றும் 40% டெல்லியிலும் நுரையீரல் மருத்துவரை சந்திப்பது அதிகரித்துள்ளதாக  இந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.



“முன்னொரு காலத்தில் தட்டம்மை மற்றும் பெரியம்மை போன்ற தொற்றும் நோய்கள் தான் அதிகமாக இருந்தன. ஆனால் தற்போது தொற்றாத நோய்களான அதாவது ஆஸ்துமா போன்ற நோய்கள் அதிகரித்து வருவதாக” குழந்தைகள் நுரையீரல் நிபுணர் டாக்டர் பரமேஷ் சுட்டிக்காட்டினார்..

காற்றின் தரத்தை தொடர்ந்து நாடு முழுவதும் கண்காணிக்கப்பட வேண்டும். மேலும் அதை வைத்து காற்று மாசுவை கட்டுப்படுத்த கொள்கைகளை கொண்டுவரவேண்டும். இதன்மூலம் மட்டும்தான் காற்று மாசுவையும்  குறைக்கவும் மக்களின் நலனை மீட்டெடுக்கவும் முடியும் என்று கீரீன்பீஸ் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல காற்று மாசுவை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் திட்டங்கள் உடனடியாக காலம் தாழ்த்தாமல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், அதை மீறுவோருக்கு தகுந்த அபராதம் விதிக்கப்பட வேண்டும். காற்று மாசு அதிகமாக உள்ள நாட்களின் போது அதை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேண்டும். பள்ளிகளுக்கு காற்று மாசு அதிகமாக உள்ள நாட்களின் போது விடுமுறை வழங்கப்படவேண்டும்.

கோப்புப் படம்


அதே போல அதிக மாசுவை ஏற்படுத்தும் வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும். தொழிற்சாலைகள் மற்றும் மின்சார உற்பத்தி செய்யும் நிலையங்கள் மூடுவதால் நகரின் காற்று மாசு பெருமளவு கட்டுக்குள் வரும் என்று கிரீன் பீஸ் அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

அதேபோல பொது போக்குவரத்தை மேம்படுத்துவது, குறைந்த மாசை ஏற்படுத்தும் பாரத் 6 ரக இன்ஜின்கள் உள்ள வாகனங்களின் தயாரிப்பை ஊக்கப்படுத்துவது, அனல் மின்நிலையங்களை அதிக அளவில் அமைப்பது மற்றும் அதன் திறனை மேம்படுத்துவது, டீசல் ஜெனரேட்டர்களின் பயன்பாட்டை தடை செய்து சூரிய ஆற்றலை கொண்டு இயங்கும் மின்சாதன பொருட்களை பயன்படுத்துவது, மரபுசாரா எரிசக்தியின் பயன்பாட்டை அதிகரிப்பது, மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்துவது, சாலையில் உள்ள தூசு மற்றும் துகள்களை சுத்தம் செய்வது, கட்டுமான பணிகளுக்கு முறையான விதிகள் அமைப்பது மற்றும் கழிவுகளை அதிக அளவில் ஏரியூட்டப்படுவதை நிறுத்துவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டால் பெங்களூரு மாநகர் மீண்டும் புதுப்பொலிவு பெறும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

 
Published by:Vaijayanthi S
First published:

Tags: Air pollution, Bangalore

அடுத்த செய்தி