அதிக சம்பளம் வழங்கும் நகரங்கள் பட்டியலில் பெங்களூர் முதலிடம்

news18
Updated: April 16, 2018, 4:58 PM IST
அதிக சம்பளம் வழங்கும் நகரங்கள் பட்டியலில் பெங்களூர் முதலிடம்
அதிகம் சம்பளம் வாங்கும் நகரங்கள் பட்டியலில் பெங்களூர் முதலிடம்.
news18
Updated: April 16, 2018, 4:58 PM IST
ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்கும் நகரங்கள் பட்டியலில் பெங்களூர் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. அதேபோல் நாட்டின் அதிக சம்பளம் வழங்கும் துறைகளில் பார்மா துறை முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த தகவல் ரான்ஸ்டேட் அனலிட்டிக்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம்  தெரியவந்துள்ளது.

மேலும் அந்த ஆய்வின் மூலம் தெரியவந்திருப்பதாவது:  பெங்களூர் நகரத்தில் சராசரியாக ஊழியர்களுக்கு  ஆண்டுக்கு 10.8 லட்ச ரூபாய் வழங்கப்படுகிறது. இரண்டாவது இடத்தில் புனே நகரம் உள்ளது. புனே நகரத்தில் ஊழியர்களுக்கு சராசரியாக ஆண்டுக்கு 10.3 லட்ச ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. தலைநகர் டெல்லியில் சராசரியாக ஆண்டுக்கு 9.9 லட்ச ரூபாயும் மும்பையில் 9.2 லட்ச ரூபாயும் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது.  இந்தப் பட்டியலில் சென்னை நகரம் 5-வது இடத்தை பிடித்துள்ளது. சென்னையில் சராசரியாக ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 8 லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு வருவதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அதிக சம்பளம் வாங்கும் துறைகளில் பார்மா துறையும் ஹெல்த்கேர் துறையும் இடம்பெற்றுள்ளன. இந்ததுறையில் உள்ளவர்களுக்கு சராசரியாக ஆண்டுக்கு 9.6 லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து எப்எம்சிஜி துறையில் அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. இந்தத் துறையில் ஆண்டுக்கு சராசரியாக 9.2 லட்ச ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

சுமார் 10 துறைகளில் உள்ள 1,00,000 ஊழியர்களிடம் இந்த ஆய்வை ரான்ஸ்டேட் நிறுவனம் நடத்தியுள்ளது.
First published: April 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்